இப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று? நிலம் அபகரிப்பு திமுக முக்கிய புள்ளி

Loading...

வேலூர்.,

திமுக மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற பெரியாரிஸ்ட்கள் இணைந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு IG பொன்மாணிக்கவேல் மற்றும் பாஜக தேசிய செயலாளர் H ராஜா ஆகியோர்களுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களை துன்புறுத்துவதாக கூறி போராட்டம் நடத்தினர்.

Loading...

இதற்கு பொன்மாணிக்கவேல் நான் சட்டப்படி நடந்துகொள்கிறேன் நிச்சயம் எனது கடமையை செய்வேன், யார் குறுக்கிட்டாலும் எனது பணியை தொடர்ந்து செய்வேன் என்று கூறியிருந்தார், மேலும் h ராஜா இது மிக பெரிய உள் நோக்கம் கொண்ட செயல் இந்து கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்த பலரும் சுருட்டி இருக்கிறார்கள்.

ஆலய மீட்பு இயக்கம் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்தால், இவர்கள் சிக்கி கொள்வார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார், விரைவில் ஒவ்வொரு கோவில் சிலை, நிலங்களை அபகரித்த அனைவரும் சிக்குவார்கள் என்று கூறியிருந்தார்.

தற்போது அதன்படி சேலம் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம்நல்லூர்ரோட்டில் உள்ள காந்தி நகர், கற்பக விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1.17 ஏக்கர் கோவில் சொத்தை திமுகவை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் செயலில் ஈடுபட்டுவந்தது அமபலமாகியுள்ளது.

இவர்கள் அனைவரும் துரைமுருகனின் ஆதரவாளர்கள் என்றும் அவர் நிலத்தினை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக பேசுவதாகவும் கோவில் நிர்வாகிகள் தலைவர் வசந்தராகவன், செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில்தான் இவர்கள் அனைவரும் நிலத்தினை மீட்க உதவுமாறு h ராஜாவினை அணுகியுள்ளனர், இதில் வேதனையான செய்தி கோவில் நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் திமுகவினர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் H ராஜா கோவில் நிலத்தை பல்வேறு நபர்களும் அரசியல் கட்சிகளும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்திருக்கின்றனர் மேலும் புதிதாக அபகரிக்கவும் செய்கின்றனர்.

இதனை எதிர்த்து நாம் பக்தர்களுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் உதவினால் நம்மை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர், இப்போது சிக்குவது யார் என்று நீங்களே பாருங்கள் என்றும் கேள்வி எழுப்பினார்?

H ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுக, விசிக, பெரியாரிஸ்ட்கள்

இதுபோன்ற செயல்களை மறைக்கத்தான் திமுக, வி சி க உள்ளிட்ட கட்சிகள் பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.?

©TNNEWS24

Source – சுதேசி வாரஇதழ்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2672 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*