இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி – நிபந்தனைகள் இதுதான்!

இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி – நிபந்தனைகள் இதுதான்!

Loading...

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் துபாயில் இன்று முதல் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் கூட்டம் கூடும் இடமான திரையரங்கங்கள் உலகம் முழுவதும் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் பணம் முடங்கியுள்ளது. மேலும் இதை நம்பியுள்ள கோடிக்கணக்கான சினிமா தொழிலாளர்களின் வாழவாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில் இதற்கு மேலும் திரையரங்குகளை மூடி வைத்திருந்தால் மக்கள் மீண்டும் திரையரங்குக்கு வரவே மாட்டார்கள் என்பதால் 50 சதவீத இருக்கைகளோடு மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதனால் வைரஸ் தொற்று மீண்டும் அதிகமாகி விடுமோ என்ற அச்சத்தால் அரசுகள் இன்னும் அதற்கான அனுமதியை அளிக்கவில்லை. இந்நிலையில் துபாய் அரசு சில நிபந்தனைகளோடு இன்று முதல் மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

  • மொத்த  இருக்கைகளில் 30 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்
  • 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது.
  • பார்வையாளர்கள் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
  • இரு பார்வையாளர்களுக்கு இடையில் 2 மீட்டருக்கு மேல் இடைவெளிக் கடைபிடிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னும் திரையரங்கத்தின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இதையடுத்து மற்ற நாடுகளும் விரைவில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*