Connect with us

#24 Exclusive

#Exclusive: தங்கத்திற்கு புதிய கட்டுப்பாடு ! பொருளாதார நிபுணர் சந்திரசேகரன் பார்வையில் !

Published

on

டெல்லி: தங்க நகைகளுக்கான ஹால்மார்க் முத்திரை வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் கட்டாயமாக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். இது தங்கம் சார்ந்த வணிகத்தில் ஓர் புரட்சி என்று பொருளாதார நிபுணர் Dr.சந்திரசேகரன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தங்க வியாபாரிகள், பொது மக்கள், நிதி ஆலோசகர்கள், பொருளாதார நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலக அளவில் தங்கம் உபயோகத்தில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இருக்கிறது நமது நாடு. ஒரு புறம் இறக்குமதியை குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் தங்கத்தின் தரத்தையும் நிர்ணயிக்க ஹால்மார்க் தரத்தை கட்டாயமாக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரச் சான்றை கட்டாயமாக்குவதை தள்ளி வைத்து, போதுமான அவகாசம் வழங்க வேண்டும் என நகை வியாபாரிகள், பொருளாதார நிபுணர்கள், நிதி ஆலோசகர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இது கடந்த நரசிம்மராவ் ஆட்சி காலத்திலிருந்தே வைக்கப்பட்டு வரும் கோரிக்கை. இந்த நிலையில், ஹால்மார்க் முத்திரை, 2021 ஜனவரி முதல் கட்டாயமாக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

Loading...

இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தங்க உற்பத்தியாளர்கள், தங்க வியாபாரிகள், தொழில் வல்லுநர்கள், தர குறியீடு வல்லுநர்கள், நிதி மற்றும் முதலீடு ஆலோசகர்கள், பொருளாதார நிபுணர்கள், மற்றும் பொது மக்கள் என பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading...

இது தொடர்பாக நாம் கோவையை சேர்ந்த முதலீடு மற்றும் பொருளாதார வல்லுநர் Dr.சந்திரசேகரன் அவர்களை தொடர்பு கொண்டு அரசின் இந்த முடிவை பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது, “தங்கம் மற்றும் அதன் சார்ந்த வணிகம் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. தங்கம் சார்ந்து நடக்கும் வர்த்தகத்தை முறைபடுத்தவும் சீர்செய்யவும் இந்த முடிவு வழிவகுக்கும். மேலும் இது நமது நாட்டில் தங்கத்தின் வாயிலாக இருக்கும் நிழல் பொருளாதாரத்தை (Shadow Economy) ஒழிக்கும். இது வருங்காலத்தில் பல நல்ல பலன்களை தரும்”. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்த இந்த முடிவு நாட்டின் பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது நாட்டின் வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் எவ்வாறு உயர்த்துகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending