Connect with us

#24 Exclusive

நாடக காதல் !!ஒரே நாளில் உச்சம் தொட்ட திரௌபதி யாருடைய வரலாறை சொல்கிறது?

தர்பார் டிரைலர்க்கு இணையாக ஒரு சாதாரண தமிழ்ப்படத்தின் டிரைலர்
பரபரப்பாக பேசப்படுகிறது . ஏற்கனவே எதிர்
பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரௌபதி படம்
இன்று வெளிவந்த டிரைலர் மூலமாக பரபரப்பை எகிற வைத்துள்ளது.

சாதிகள் உள்ளதடி பாப்பா என்று சாதியின்
பெருமையை சொல்லி தமிழில் ஒரு படம்
வருவது ஆச்சரியமானது.வன்னியர்களின்
பெருமையை கூறும் படமாகதான் இது இருக்க முடியும். படத்தின் டைட்டிலை வைத்தே இது வன்னியர்களின் வாழ்வியலை கூறும்படம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

தமிழகத்தில் திரௌபதி வழிபாடு வன்னியர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. தந்தை மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கியர்களை பழிவாங்க அவருடைய மகன் நரசிம்ம பல்லவன் தன்படையில் இருந்த வன்னியர்களுக்கு பழிவாங்கும் உணர்வு வந்து போர்வெறி உண்டாக வேண்டும் என்று அவர்களை மகாபாரதம் படிக்க வைத்துள்ளார்.

Loading...

நரசிம்ம பல்லவர் உருவாக்கிய பழக்கம் இன்றும் வன்னிய மக்களிடையே தொடர்ந்து
வருகிறது. மகாபாரதம் படித்ததன் விளைவாக திரௌபதிக்கு கோயில் கட்டி தெய்வமாக வழிபடும் பழக்கம் அவர்களிடையே உருவாகி விட்டது.

Loading...

வட மாவட்டங்களில் முரண்பட்டு நிற்கும் இரு
சாதிகளின் மண் சார்ந்த போராட்டம் தற்போது பெண்சார்ந்து இருக்கிறது என்று திரௌபதி படத்தின் மூலம் மண்ணும் பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்று இயக்குனர் திரௌபதி டிரைலர் மூலமாக தெறிக்க விட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சாதிகளை குற்றம் சுமத்தி படம் எடுத்த எந்த இயக்குனரும் அதே சாதிகளில் உள்ள நல்ல கருத்துக்களையும், அங்கு பெண்கள் மீது தொடுக்கப்படும் போலி காதல் பிரச்சனைகளையும் பேசுவது இல்லை என்ற குற்றசாட்டு பல காலமாக இருந்து வந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இதுபோன்ற மாற்றங்கள் வருவது வரவேற்கத்தக்கது, எந்த சாதிகளையும் ஏற்ற தாழ்வு அடிப்படையில் பார்க்காமல் தன் மண் சார்ந்த பெருமையை பேசுவதில் தவறில்லை.

திரௌபதி மிரட்டுவாள் என்று எதிர்ப்பார்க்கலாம் ! (.திரு. விஜயகுமார் )

Loading...

Trending