Connect with us

#24 Exclusive

இந்த ஒரு காரணத்திற்காக திரௌபதி படத்தை தடை செய்யவேண்டும் புகார் கொடுத்த பெரியாரிஸ்ட்கள் !! என்ன அந்த ஒற்றை காரணம்?

சமூகவலைத்தளம் :- திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி முன்னணி திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றுள்ளது, அதே நேரத்தில் சில பெரியாரிஸ்ட் இயக்கங்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள், இன்னும் பிற இடதுசாரிய பத்திரிகையாளர்கள் ஆகியோர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பா ரஞ்சித் திரைப்படத்தை வரவேற்று கருத்து சுதந்திரம் என்றும் சமீபத்தில் வெளியான அசுரன் படத்தை சாதிய ரீதியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று அறிவுரை வழங்கிய நபர்கள் பெரும்பாலும் திரௌபதி திரைப்படத்தை எதிர்த்து பேச தொடங்கியுள்ளன, இந்நிலையில் பெரியார் திராவிட கழகம் எனும் அமைப்பு கொளத்தூர் மணி என்பவரால் நடத்தப்படுவது.

இந்நிலையில் இந்த அமைப்பு சார்பில் இன்று சென்னை கமிசனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது, அதில் திரௌபதி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சாதிய வன்முறைகளை தூண்டும் விதமாக இருப்பதால் இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்றும் இல்லை என்றால் தமிழகத்தில் கலவரம் உண்டாக வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்., அதாவது திரௌபதி திரைப்படம் திரைக்கு வந்தால் சாதி மோதல்கள் உண்டாகும் என்று ஒற்றை காரணத்தை குறிப்பிட்டுள்ளனர்.

Loading...

இந்த புகார் கொடுத்த அமைப்புதான் உடுமலை கௌசல்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது என்பதும், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் உட்பட பல போராட்டங்களை நடத்தியவர்கள் என்பதும் சீதைக்கு எத்தனை…. என பல விமர்சனங்களை பொது வெளியில் பேசியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றும், இதனை பா ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் படம் எடுக்கும் போது வாழ்த்தியவர்கள்.

Loading...

தங்கள் ஊர் கதையில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தை சந்தித்து, உண்மை கதையை தழுவி நீதிமன்றத்தில் நடந்த வழக்கை அடிப்படையாக கொண்டு நடந்த வழக்கின் தழுவலை ஒட்டிய படத்தை தடை செய்ய கோரிக்கை வைப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர், இந்த படத்தில் எந்த சாதியையும் உயர்த்தியோ இல்லை தாழ்த்தியோ திரைப்படம் எடுக்கவில்லை என்றும் நாடாக காதலால் பெண்களின் குடும்பம் படும் பாட்டினை இந்த திரைபடம் மூலம் வெளியில் சொல்ல இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

படம் வெளிவருவதற்கு முன்பே பெரியாரிஸ்ட்களும் முற்போக்குவாதிகளும் கதற தொடங்கிவிட்டார்கள் என்று சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

©TNNEWs24

Loading...

Trending