அதிகரிக்கும் இஸ் லாமிய தீவிரவாதம் இந்தியர்கள் என்ன செய்யவேண்டும் கிருஷ்ணசாமி அதிரடி அழைப்பு !

இந்திய இராணுவத்தை சேர்ந்த வீரர்கள் காஷ்மீர் தீவிரவாதிகளால் பினை கைதிகளாக பிடிக்கப்பட்ட உள்ளூர் மக்களை மீட்கும் போராட்டத்தின் போது வீரமரணம் அடைந்தனர், இந்நிலையில் வீரர்களின் மறைவு நாட்டினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ள சூழலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனது இரங்கலை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் அதில் :-

Loading...

பன்னெடுங்காலம் பாரம்பரியம் கொண்ட பாரத தேசம் சுதந்திர போராட்டத்தின் போது மதரீதியான பிரிவினைகளுக்கு ஆளானது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்காள தேசம்) என்று ஆங்கிலேயர்களால் பங்கு போடப்பட்டது. எஞ்சியிருக்கும் பிரதேசத்திலாவது இந்திய மக்கள் நிம்மதியாக இருக்க முடிகிறதா? என்றால் இல்லை.

சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும், இந்திய எல்லையில் காஷ்மீர் வழியாக பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவலாலும், தாக்குதலாலும் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் நமது இந்திய வீரர்கள் தனது இன்னுயிரை இழக்கும் நிலை நீடித்துக் கொண்டே வருகிறது.

Loading...

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இந்திய எல்லையின் வனப்பகுதி வழியாக ஊடுருவி வந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் அப்பகுதி இந்திய கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து, அவ்வீட்டினரை சிறை பிடித்தார்கள். அவர்களை விடுதலை செய்வதற்காக தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற மோதலில் இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவியான கர்னல் மற்றும் மேஜர் உட்பட இரண்டு இராணுவ வீரர்களும், ஒரு காவல்துறை அதிகாரியும் வீரமரணம் எய்தினர்.

அதை தெடர்ந்து 4ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாதிகளுடனான இன்னொரு மோதலில் மூன்று சிஆர்பிஃஎப் வீரர்கள் வீரமரணம் எய்தினர். அவ்வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த சந்திரசேகர் ஆவார். அவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
தம்முடைய தாய் தேசமான பாரத தேசத்தை பாதுகாப்பதற்காக..

தன்னுயிர் நீத்த சிஆர்பிஎஃப் வீரர் சந்திரசேகர் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தனது புகழஞ்சலியை செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அது போல உயிர் நீத்த கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இராணுவ வீரர்கள் ராஜேஷ் நாயக், தினேஷ், சப் இன்ஸ்பெக்டர் முகமது சாகியிர், சிஆர்பிஎஃப் வீரர்கள் சந்தோஷ் குமார் மிஸ்ரா, அஸ்வானி யாதவ் ஆகியோருக்கும் புதிய தமிழகம் கட்சி தனது அஞ்சலியை செலுத்துகிறது.

ஏதோ எல்லையில் தினமும் மோதல் நடக்கிறது என்று இந்தியர்கள் எளிதாக இருந்து விடக்கூடாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் பரந்துபட்டுள்ள இந்திய தேசத்தின் ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய தேசத்தை பாதுகாக்க வீறுகொண்டு எழுவோம் என சபதம் ஏற்பதே! உயிர்நீத்தவரகளுக்கு செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும். இவ்வாறு அவர் தனது கருத்தினை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*