தூர்தர்ஷனுக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா? எல்லாம் அந்த இரண்டு விஷயங்களால்தான்!

தூர்தர்ஷனுக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா? எல்லாம் அந்த இரண்டு விஷயங்களால்தான்!

Loading...

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தூர்தர்ஷன் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 40000 சதவீதம் அதிகமாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. சினிமாவைப் போல அல்லாமல் சீரியல்கள் வாரத்தின் 6 தினங்களில் ஒளிபரப்பப் படுவதால் அதன் படப்பிடிப்பு பெரும்பாலான நாட்களில் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

Loading...

இதனால் புதிய எபிசோட்கள் இல்லாமல் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் சில தொலைக்காட்சி சேனல்கள் பழைய பிரபலமான சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன. இதனால் பழைய பிரபலமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 90களில் தூர்தர்ஷனில் மிகவும் பிரபலமாக இருந்த ராமாயணம் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ சீரியலான சக்திமான் மீண்டும் ஆகியவை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதனால் தூர்தர்ஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு அதிகமாகியுள்ளது. கிட்டதட்ட 40000 சதவீதம் அதிகமான பார்வையாளர்கள் தூர்தர்ஷனுக்கு அதிகமாகியுள்ளனர். ஒரு காலத்தில் தொலைக்காட்சி உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய தூர்தர்ஷன் தனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்னர் தனது பொலிவை இழந்தது. இந்நிலையில் இப்போது மீண்டும் தனது பார்வையாளர்களைத் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*