Connect with us

#24 Exclusive

இதை செய்தால் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்?

Published

on

இதை செய்தால் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்?

மழைக்காலம் வந்தாலே நாம் ஆரோக்கியத்திற்கு பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதிலும் குறிப்பாக சைனஸ், ஆஸ்துமா இருப்பவர்களுக்கு சாதாரண குளிர் தண்ணீரில் முகம் கழுவினாலும் தும்மல், தலைவலி, மூக்கடைப்பு, தலைபாரம், சளி தொல்லை என பிரச்சினைகள் வரும். அது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல படுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இந்த மாதிரி பிரச்சினைகள் மழை காலங்களில் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலங்களில் வரக்கூடிய முக்கியமான பிரச்சினையை சளி தான். சளி பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் மிளகு, சீரகம் ,துளசி ஓமவள்ளி, தூதுவளை சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டைக்கு இதமாக இருப்பதுடன் சளி தொடர்பான எல்லா பிரச்சினைக்கும் தீர்வு தரும் அதுமட்டுமல்லாமல் துளசி ஊறவைத்து தண்ணீரை குடிப்பது மிகவும் நல்லது.

மழைக்காலங்களில் தலை குளிப்பது சிலபேர் தடுப்பார்கள் குறிப்பாக சைனஸ், தலைவலி, ஒற்றைத் தலைவலி என காரணம் சொல்லி குளிப்பதை தவிர்ப்பார்கள். அப்படி செய்வதால் நோய் தொற்று தான் அதிகம் ஆகும். அதனால் தலைக்குக் குளித்ததும் ஈரம் இல்லாமல் காயவைப்பது ரொம்ப நல்லது. ஆரஸ்வதி இலையை தண்ணீரில் போட்டு குளித்தால் சளித் தொல்லையும் இருக்காது.

மழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகம் சாப்பிடும் சாப்பாடு தான் கரணம். முடிந்த வரிக்கும் ஆவியில் வேக வைத்த உணவை வேண்டும் . மழைக்காலங்களில் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. காரணம் சுகாதாரமில்லாத உணவிலும் , தண்ணீரிலும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.இதை தவிர்க்க சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது ரொம்ப அவசியம். சாப்பிடுவதற்கு முன் கை கழுவுவது மற்றும் தண்ணீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு வருவதை தவிர்க்கலாம் அதுமட்டுமல்லாமல் காலரா மஞ்சள் காமாலை சுத்தமில்லாத தண்ணீரால் தன நோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதனால் தண்ணீரை சூடு செய்து ஆற வைத்து குடிப்பது நல்லது. மழையில் நனைந்தாலோ அல்லது குளிச்சியான சூழ்நிலையில் இருந்தாலோ மூக்கடைப்பு ,சளி இருப்பது போல் இருந்தால் மணத்தக்காளி கீரையை சூப் செய்து குடித்தால் உடனடியாக ஜலதோஷம் நீங்கிவிடும். மணத்தக்காளி குளிர்ச்சி ஆனாலும் சூப் செய்து குடிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பு மூக்கடைப்பு ஜலதோஷம் குணமாகும்.

அசைவ உணவை சாப்பிடுபவர்கள் மீன் இறைச்சி போன்ற உணவை சாப்பிடலாம். அது மட்டுமல்லாமல் சாப்பிட்ட உணவு செரிமானம் அடையும் மாதிரி பார்த்துக்கொள்ளவேண்டும். அசைவ உணவு சாப்பிட்டதும் வெற்றிலை மற்றும் புதினா சாப்பிடுவதால் உடனடியாகச் செரிமானம் நடைபெறும்.

மழைக்காலத்தில் கொசு, பூரான், வண்டு , சின்ன பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்கு நொச்சி வேம்பு போன்ற இலைகளை தீ போட்டு புகை மூட்டம் போட்டால் கொசு தொல்லை இருக்காது. வீட்டிற்குள் கற்பூரம் மற்றும் மஞ்சள் தண்ணீர் தெளித்தால் போன்றவை மூலம் பூச்சிகளின் தொல்லை இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மழைக்காலம் என்றால் தண்ணீர் அதிகமாக குடிக்க மாட்டோம் அப்படி செய்வதனால் மலச்சிக்கல் தான் ஏற்படும் அதற்காகவே தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும் மலச்சிக்கல் வந்தால் காய்ந்த திராட்சை, கொய்யா, பப்பாளி சாப்பிடுவதால் மலச்சிக்கல் தவிர்க்கலாம். பூண்டு பால் குடிப்பது நல்ல நிவாரணம் ஆகும். பூண்டுப்பால் செய்வதற்கு 10 பூண்டு தோலுரித்து 50 மிலி பால் ஊற்றி அதே அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும், பாதி அளவு பால் வற்றியதும் அதனுடன் மிளகுத்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து குடிப்பது மூலம் சளி இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share