Connect with us

#24 Exclusive

போராட்டம் தொடரும்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்போது பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது

இந்த நிலையில் இன்று மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சில மணி நேரங்களாக நடந்த போதிலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனை அடுத்து எங்கள் போராட்டம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் என்றும், மருத்துவர்களின் இந்த போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம் என்றும் மற்றொரு சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் நாளையும் போராட்டம் தொடரும் என்று கருதப்படுகிறது

Loading...

இந்த நிலையில் மருத்துவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு நாளை பணிக்கு வராவிட்டால் அவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரேக் இன் சர்வீஸ் என்றால் பணிக்கு வராத மருத்துவர்களின் பணியிடங்கள் காலி இடமாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மாற்று மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

எனவே போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் சிலர் பணி பாதுகாப்பு கருதி நாளை பணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் மருத்துவ சங்க நிர்வாகத்தினர் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளதால் நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Loading...

Trending