வாடகை வீட்டில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள்… காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் – ஏன் தெரியுமா ?

வாடகை வீட்டில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள்… காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் – ஏன் தெரியுமா ?

Loading...

கொரோனா வைரஸ் நோயாளுகளுக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லி வீட்டு  உரிமையாளர்கள் பிரச்சனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் சிகிச்ச்சை அளித்து வருகின்றனர்.

Loading...

அவர்களுக்கு நாடு முழுவதும் ராட்டு தெரிவித்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு நோயாளிகளிடம் இருந்து வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அவர்களின் வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்வதாகவும் சிலரைக் கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அவர் அறிவித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*