நோயாளிக்கு ஊட்டி விட்ட மருத்துவர் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நோயாளிக்கு ஊட்டி விட்ட மருத்துவர் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Loading...

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உறவினர்களின் ஆதரவு இல்லாமல் இருந்த நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் உணவு ஊட்டிவிடும் புகைப்படும் வைரலாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2900 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 72 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆகவும் உள்ளது.இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ளன.

Loading...

ஊரடங்கால் சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு நோயாளியின் உறவினர்களால் வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் உதவிக்கு ஆட்கள் இலலாமல் நோயாளி தனிமையில் வாடியுள்ளார்.

இந்நிலையில் நெப்ராலஜி துறையின் இயக்குனர் மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் நோயாளிகளைப் பார்க்க ரவுண்ட்ஸ் வந்தபோது அவரது நிலைமையப் பற்றி தெரிந்துகொண்டுள்ளார். இதையடுத்து யாருமில்லாத அந்த நோயாளிக்கு தானே உணவினை ஊட்டிவிட்டு ஆதரவாகப் பேசியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*