கிறிஸ்துவர் நீ எப்படி பாஜகவில் இணையலாம் என கேள்வி எழுப்பியவர்களை 4 கேள்வியால் மிரளவிட்ட தமிழகத்தை சேர்ந்த டெய்சி !!

தமிழக தேர்தல் களம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு பரவலாகி வருகிறது அந்த வகையில் பல அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாற்று கட்சிகளில் இணைவதும், வேறு சிலர் புதிதாக கட்சியில் இணைவதும் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் பெண் மருத்துவர் டெய்சி !

Loading...

இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்த வண்ணம் இருக்க அவரது உறவினர்கள், மற்றும் சிலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் மோடியை பாராட்டி பேசலாமா எனவும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்,

இந்த நிலையில்தான் கிறிஸ்துவர் பாஜகவில் இணைய கூடாதா? எனவும் ஏன் பாஜகவில் இணைந்தேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார் டெய்சி, உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு என பல நாடுகள் இருக்கிறது ஆனால் இந்தியர்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா என தெரிவித்துள்ளார்.

Loading...

அத்துடன் நில்லாமல் இந்தியாவை அப்பா, மகன்,. மனைவி, மகன் என ஒரே குடும்பம் தான் ஆட்சி செய்யவேண்டுமா? நாம் என்ன அடிமையா எனவும் கேள்வி எழுப்பியவர், இந்தியாவை இந்தியர் ஒருவர் ஆட்சிசெய்வது வரவேற்க கூடிய விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தியவர் மோடி, எனவும் உலகிலேயே முதலாவது வலிமையான கடற்படை நம்முடையது அதை உருவாக்கியவர் மோடி என குறிப்பிட்டுள்ளார்.

மோடி செய்த நல்லதை எடுத்து கூறுபவர்களை மீம்ஸ் மூலம் நசுக்கும் வேலையை செய்யாமல் முதலில் அவர் செய்த சில திட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் ஏழைகளுக்கு செய்த சில திட்டங்களை விளக்கி கூறியுள்ளார், தற்போது டெய்சி அளித்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது, வீடியோ கீழே :-

மோடியின் நிர்வாக திறமையை பாராட்டி விளக்கம் கொடுப்பவர்களை எல்லாம் சங்கீ என முத்திரை குத்தினால் இனி தமிழகத்தில் சங்கிகள் எண்ணிக்கை அதிகமாகும் என சமூக வலைத்தளங்களில் பரவும் செயல் உண்மையாகி வருகிறது. இந்நிலையில் மோடியின் தலைமையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இணைந்து வருவது பல காலமாக மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என திமுக உள்ளிட்ட கட்சிகள் பரப்பி வரும் கோசத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3944 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*