தமிழகத்தில் போக்குவரத்து தொடங்கப்படுமா? மருத்துவர் குழு சொன்னது என்ன?

தமிழகத்தில் போக்குவரத்து தொடங்கப்படுமா? மருத்துவர் குழு சொன்னது என்ன?

Loading...

முதல்வருடன் நடந்த ஆலோசனையில் மருத்துவர்க் குழு பொதுப்போக்குவரத்தைத் தொடங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு விகிதம் குறைவாகவும், குணமானவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் இன்றோடு 61 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில் அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து ஐசிஎம்ஆர் துணைத் தலைவர் பிரதீப் கவூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Loading...

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதுமே பொதுப் போக்குவரத்தை தொடங்கக் கூடாது எனவும் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் போக்குவரத்தை தொடங்கினாலும் அது ஆபத்தில் முடியும் என எச்சரித்துள்ளனர். மேலும் சென்னையில் எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகத்தில் தினசரி 700 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் நிலையில் தற்போதைய தமிழக எண்ணிக்கை 16,000 ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் எண்ணிக்கை விரைவில் 11,000 ஐ தாண்டியுள்ளது..

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*