Connect with us

#24 Exclusive

மோடி ஏன் டெல்லியை தவிர்த்து சென்னை மஹாபலிபுரத்தில் சீனா அதிபரை சந்திக்கிறார் தெரியுமா? அள்ளுவிடும் போராளிகள் !

Published

on

மோடி ஏன் டெல்லியை தவிர்த்து சென்னை மஹாபலிபுரத்தில் சீனா அதிபரை சந்திக்கிறார் தெரியுமா? அள்ளுவிடும் போராளிகள் !

மகாபலிபுரம்.,

சென்னையை தாண்டி ஓ.எம்.ஆர், மற்றும் ஈ சி ஆர் கடற்கரை வழியாக தினமும் சென்று வருபவர்களுக்கு தெரியும் அந்த சாலைகளில் எத்தனை பாதுகாப்பு முன்னேற்பாடு மற்றும் சாலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று மேலும் தற்போது சுற்றுலா நகரமான மகாபலிபுரமே என்.எஸ்.ஜி., மற்றும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சென்னையில் அதுவும் டெல்லியை தவிர்த்து மகாபலிபுரத்தில் ஏன் மோடி சீனா அதிபரை சந்திக்க வேண்டும் என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்த வண்ணம் உள்ளன, ஏன் பல காவலர்களே இதே சிந்தனையில் இருக்கின்றனர். இவற்றிற்கு பதில் கிடைத்துள்ளது.

மோடி ஆட்சி பொறுப்பேற்ற அன்று முதல் வெளிநாட்டு தலைவர்களை டெல்லியை தவிர்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சந்திக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார், அதனை தொடர்ந்து கடந்த முறை இந்தியா வருகை தந்த சீன அதிபரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சந்தித்தார்.

மோடி இந்தியாவை சேர்ந்த முக்கிய நகரங்களில் வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதன் மூலம் குறிப்பாக அந்த பகுதிகளை சேர்ந்த பாரம்பரிய கலைகள் வெளியுலகிற்கு தெரியவரும் சுற்றுலா வளர்ச்சி மேம்படும் என்பது அவரின் கணக்கு !

ஆனால் சீனா அதிபரை மகாபலிபுரத்தில் சந்திப்பதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் இருக்கின்றன, ரசியாவுடன் தற்போது எண்ணை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்ட மத்திய அரசு அதனை சென்னை துறைமுகத்தில் நேரடியாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது, இதனால் பொருளாதார ரீதியாக ரசியாவுடன் பிணைப்பு ஏற்படும் போது ரஷியா இந்தியா பக்கம் எப்போதும் நிற்கும் என்பது மத்திய அரசின் திட்டம்.

மேலும் சீனாவின் மத குருவாக போற்றப்படும் போதிதர்மன் வாழ்ந்த பகுதி பல்லவ மன்னர்களின் பகுதியாக இருந்த மகாபலிபுரம் இங்கு இருந்துதான் சீனாவிற்கு போதிதர்மன் சென்றதாகவும் வரலாற்று உண்மையை உலகிற்கு தெரியப்படுத்தவும் இந்தியாவில் இருந்துதான் புத்த மதம் பரவியது என்பதனை நினைவு படுத்தவும் மோடி சீனா அதிபரை மகாபலிபுரத்தில் சந்திப்பதற்கான திட்டம் என்றும் கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் விட மோடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க 4 மாதத்திற்கு ஒருமுறை மோடி தமிழகத்தில் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளை அரங்கேற்றவும், மக்கள் மனதில் தொடர்ந்து மாற்றத்தை கொண்டுவர முயற்சியில் இறங்கியுள்ளதும், மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நேரடியாக தமிழகம், கேரளாவில் கவனத்தை செலுத்த மோடி திட்டமிட்டிருபதாகவும் கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டுத்தான் மோடி சீனா அதிபரை தமிழகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மோடியின் கணிப்பு இதுவரை சரியாக நடந்துள்ளதால் நிச்சயம் தமிழர்கள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாஜகவினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மறுபக்கம் மோடியின் திட்டம் என்ன என்று தெரியாமல் திமுக மற்றும் அதன் கூட்டணி இயக்கங்கள் கடும் பதற்றத்தில் இருப்பதாகவும் அடுத்து என்ன என்ற பீதியிலேயே நாட்களை கடத்துவதாக கூறப்படுகிறது.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share