Connect with us

#24 Exclusive

இனி பேருந்துகளில் கதவுகள் திறந்திருந்தால் என்ன தண்டனை தெரியுமா?

Published

on

பேருந்துகளில் வாசல் கதவுகளை திறந்து வைத்தால் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு உடனடி மெமோ நடவடிக்கை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் அரசு பேருந்துகள் எந்த ஒரு வசதியும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்தில் ஜன்னல் மற்றும் கதவுகளில் குறைகள் ஏதும் இருந்தும் சரி பார்க்காமல் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பேருந்தை ஓட்டி செல்கின்றனர். இதன் விளைவாக அரசுப் பேருந்தில் பயணித்த பெண் தவறி விழுந்ததை எடுத்து பேருந்து கதவுகளை மூடாமல் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு போக்குவரத்து துறை மெமோ வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்தில் பயணித்த பெண் கோகிலா. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கோகிலா. கடந்த வாரம் அரசு பேருந்து ஒன்று பயணித்தபோது பேருந்தில் அதிகம் கூட்டம் இருப்பதால் உட்கார்வதற்கு இடம் கிடைக்காததால், பேருந்து வாசலின் அருகில் நின்று கொண்டு பயணித்தபோது, ஓட்டுனர் பேருந்தில் இருக்கும் பயணிகளின் நலனை கருதாமல் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை வேகமாக திரும்பியதால் பேருந்து வாசலில் நின்று கொண்டிருந்த பெண் வாசலில் இருந்து தடுமாறி தூரமாக தார்சாலையில் விழுந்து உடல் முழுவது தேய்த்து அருகில் இருக்கும் சாக்கடையில் விழுந்து படுகாயமடைந்தார்.
பின்பு காயமடைந்த பெண்ணை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சுற்றியிருந்த மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் மக்கள் நலம் கருதி அனைத்து பேருந்துகளிலும் கதவுகள் சரியாக மூடப்பட்டு வருகிறதா என்பதைக் குறித்து திடீர் ஆய்வு செய்யப்படுகிறது. எந்தப் பேருந்துகளில் வாசலின் கதவுகள் மூடப்படவில்லை எனில் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு உடனடி யாக மெமோ வழங்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு போக்குவரத்து அதிகாரிகளின் நடவடிக்கையின் மூலம் இனிமேல் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என மக்கள் நம்புகிறார்கள்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com