பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கஸ்தூரிக்கு கவின் வைத்த பட்டப் பெயர் என்ன தெரியுமா ????

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கஸ்தூரிக்கு கவின் வைத்த பட்டப் பெயர் என்ன தெரியுமா ????

Loading...

விஜய் டிவியில் பிக்பாஸ்1, பிக் பாஸ் 2, நிகழ்ச்சியை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அண்மையில் நடந்த முடிந்தது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றினார்கள். இந்த பிக் பாஸ்சீசன் இந்நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவ் டைட்டில் வின்னரானார்.பின்பு இரண்டாம் இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டியும், மூன்றாம் இடத்தை இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா இடம் பிடித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த பிறகு பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடத்துவார்கள். அதே போல் இந்த பிக் பாஸ் 3 சீசனில் 16 போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.இந்நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளரான மதுமிதா, சரவணன் மற்றும் மீரா மிதுன் ஆகிய மூன்று பேரை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் அனைவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மக்களிடம் என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதில் முக்கியமாக பாத்திமா பாபு மற்றும் வைத்திய நாதன், சேரன் போன்றவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது அதுமட்டும் இல்லாமல் மக்களிடையே நல்ல பிரபலமாகியிருக்கிறோம், புதிய வாய்ப்புகள் வந்துள்ளன என்றனர். இதில் நடிகை வனிதா நிறைய தம்பி தங்கைகள் கிடைத்திருப்பதாகவும் மற்றும் நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற பிறகு நிறைய பொறுமை வந்துள்ளதாகவும் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர் வைத்து கிண்டல் செய்த கவின். அதில் சேரனுக்கு பட்ட பெயர் சைக்கிள் என்றும், மதுமிதாவை குள்ளச்சி என்றும், கஸ்தூரிக்கு அவர் பேசும் போதெல்லாம் காக்கா கத்துவது போல் இருந்ததால் அவருக்கு காக்கா என்று பட்டப் பெயர் வைத்தார் கவின். இதை கேட்ட கஸ்தூரி யார் காக்கா என்று கூறினாலும் எனக்கு கோபம் வருவதில்லை என கூறி கவினை வாரினார்.

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*