Connect with us

#24 Exclusive

முடி கொட்டுதா கவலையை விடுங்க இதை செய்யுங்கள் முடி கொட்டுவது ஒரே வாரத்தில் நின்று விடும்

Published

on

முடி அதிகமாக கொட்டுதா அப்போ இதை பயன்படுத்துங்கள் ஒருவாரத்தில் முடி கொட்டுவது நின்று புது முடி வளரும்.

இந்த முறையை முயற்சி செய்வதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம். மேலும் பேன் பொடுகு தொல்லையும் நீங்கிவிடும். பொதுவாக வைட்டமின் குறைவாக இருந்தாலும் முடிஉதிர்வு அதிகமாக இருக்கும். இல்லையென்றால் தலையை சுத்தமாக வைத்துகொள்ளவில்லை என்றாலும் முடி கொட்டும். வைட்டமின் குறைபாடு நீக்குவதற்கு அரைக்கீரை, முருங்கக்கீரை ,பேரிச்சம்பழம் மற்றும் முக்கியமாக தண்ணீர் அதிகமாக குடித்தாலே வைட்டமின் குறைபாடு நீங்கிவிடும்.

இப்போது நம்ம தலைமுடிக்கு நல்லவலு சேர்க்கக்கூடிய ஹேர்பேக் தயார்செய்வது எப்படி என்று பார்க்கலாம். இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்து அதை மிக்சியில் அரைக்கவேண்டும். அது ஓரளவு அரைத்தால் போதுமானது. அதில் அரிசி அலசிய நீரை வெந்தயத்துடன் கலக்கவேண்டும். இந்த அரிசி கலந்த நீரில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. அரிசிகளைந்த நீர் இல்லையென்றால் பச்சரிசி மாவை தண்ணி போல் கலந்து பயன்படுத்தலாம்.

இப்பொழுது அந்த வெந்தயநீரை அடுப்பில் வைத்து பத்து நிமிடம் சூடாக்க வேண்டும். பிறகு சுட்டவுடன் வட்டிக்கட்டவேண்டும். வடிகட்டிய பிறகு அந்த சக்கையை தூக்கிப்போடவேண்டாம் ஏனெனில் அதில் வைட்டமின் C உள்ளதால் அதை முகத்தில் தேய்ப்பதால் முகம் ஜொலிக்கும் கை ,கால்களிலும் கூட தேய்க்கலாம்.


இப்பொழுது அந்த வடிகட்டிய நீருடன் ஆமணக்கு எண்ணெய் அல்லது நல்லஎண்ணெய் , தேங்காய்எண்ணெய் இதில் எதாவது ஒரு எண்ணெயை கலந்து தலையில் உள்ள முடி முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவது நின்று முடி நன்றாக வளரும் அத்துடன் பேன் பொடுகு தொல்லையும் நீங்கும்
இதை முதலில் வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தவேண்டும் பிறகு வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் போதுமானது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share