நாளை இரவு விளக்கு ஏற்றும் முன்னர் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் – மக்களுக்கு ஒரு அறிவுரை !

நாளை இரவு விளக்கு ஏற்றும் முன்னர் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் – மக்களுக்கு ஒரு அறிவுரை !

Loading...

நாளை இரவு பிரதமர் அறிவிப்பின்படி விளக்கு ஏற்றும் முன்னர் கைகளை சானிட்டைசர்களால் கழுவவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2900 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 72 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆகவும் உள்ளது.இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ளன.

Loading...

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி மக்களிடம் பேசிய மோடி ‘ஊரடங்கால் நாம் தனியாக இருந்தாலும் நம்மோடு 130 கோடி இந்தியர்களும் உள்ளனர். நமது ஊரடங்கு முறையை இப்போது உலகமே பின் பற்றுகிறது. ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள், செல்போன் டார்ச் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  9 நிமிடம் இதுபோல செய்து நமக்காக உழைக்கும் மருத்துவர்களை மற்றும் சக மக்களை நினைத்துப் பார்க்கவேண்டும். கொரோனா ஏற்படுத்திய இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வருமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து நாளை இரவு மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற உள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகப் பலவிதமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கியமாக யாரும் விளக்கு ஏற்றும் முன்னர் கைகளை சானிட்டைசர்களால் கழுவ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் சானிட்டைசர்களில் 60 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் இருப்பதால் எளிதில் தீப்பற்ற வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*