Connect with us

#24 Exclusive

இப்படி ஒரு கணக்கு இருக்கா அதிமுகவை விமர்ச்சிக்கும் பாமக, காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற துடிக்கும் திமுக என்ன காரணம் ?

Published

on

சென்னை :- உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக அதிமுக ஆகிய இரு கட்சி தலைமைகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட்டணி கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக எழுந்து வருகிறது, இது இரண்டு தரப்பினர் இடையேயும் காணப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி விட்டது என காங்கிரஸ் திமுக மீது குற்றம் சுமத்த, அதே போல் பாமக அதிமுகவிடம் உள்ளாட்சியில் இடங்களை பெறுவதற்கு மிக பெரிய சந்தை கடையை போல் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார், அத்துடன் சமீபத்தில் விவசாயிகள் நலனுக்கு திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே எதுவும் செய்யவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த சூழலில்தான் இரண்டு கூட்டணிகள் இடையே என்ன நடக்கிறது என வெளிவர தொடங்கியுள்ளது, 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தரப்புடன் கூட்டணி வைக்க எடப்பாடி நினைப்பதாக கூறப்படுகிறது, அதற்கு முக்கிய காரணம் ஓபிஎஸ் வசம் இருக்கும் அதிகாரங்களை குறைக்கவும் தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் எனவும் தான் சொல்வதை காங்கிரஸ் கேட்கும் என்றும் நினைக்கிறார்.

Loading...

அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்தால் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அவர்கள் ஏதேனும் முடிவு எடுக்கலாம் என கருதுகிறார், இனி மீதி சட்டமன்ற ஆயுள் காலத்திற்கு பாஜகவின் தயவு தேவையில்லை என்பதால் எடப்பாடி இயல்பாக திமுக பாஜக கூட்டணி ஏற்படுத்த நினைப்பதாக கூறப்படுகிறது.

Loading...

அதே நேரம் தனது ஆதரவாளர்களிடம் சொல்லி புதுவருட காலண்டரில் ஓபிஎஸ் புகைப்படம் அடிக்காமல் விநியோகம்செய்யுமாறும் உத்தரவிட்டதாக கட்சியினரே குற்றம்சாட்டி வருகின்றனர், எடப்பாடி கணக்கு இப்படி இருக்க ஓபிஎஸ் என்ன நினைக்கிறார் என்பது தற்போதுவரை தெரியவில்லை, பாமக தரப்போ அதிமுகவிற்கு நமது வாக்கு வங்கி தேவைப்படுகிறது எனவே வருகிற தேர்தலில் அதிக இடங்களை கேட்டு வாங்கலாம் எனவும் அப்படி வழிக்கு வரவில்லை என்றால்..,

பாமக தலைமையில் காங்கிரஸ், TTV தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைத்து தனித்து களம் காணலாம் என கணக்குபோட்டுள்ளது, இதனை நினைவு படுத்ததான் அடிக்கடி தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாமக என அதன் நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது., ஆனால் திமுகவோ கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கமுடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியதுதான் காரணம் என்று கருதுகிறது.

மேலும் இந்த முறை அதை செய்யக்கூடாது எனவும் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகளுக்குள் ஒதுக்க திமுக முடிவெடுத்து உள்ளது, அதனால்தான் காங்கிரஸ் என்ன சிந்தனையில் உள்ளது என திமுக நூல் விட்டு பார்ப்பதாக கூறப்படுகிறது, எனவே கூட்டணி கணக்குகள் மாறலாம் என்றாலும் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை எனவும் அதனை இரண்டு தரப்பு தொண்டர்களுமே விரும்வில்லையாம்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending