ஆட்டத்தை ஆரம்பித்தது பாஜக ! திமுகவில் இரண்டு முக்கிய விக்கெட் அவுட் !!

கொரோனா மெல்ல மெல்ல மக்கள் மனதை விட்டு அகன்றுவரும் சூழலில் இந்தியாவில் மீண்டும் அரசியல் புயல் அடிக்க ஆரம்பித்துள்ளது, அது தற்போது தமிழகத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது.

Loading...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 2021 – ம் ஆண்டு நடைபெற இருக்கிறது, வழக்கம் போல் இந்த முறை திமுக அதிமுக இடையே ஆட்சியை கைப்பற்றுவது யார் என்ற போட்டி இருக்கும் என பிரபலமான அரசியல் விமர்சகர்கள் முதல் கூட்டணி கட்சிகள் வரை கணித்து அதற்கேற்ற வியூகம் வகுக்க முடிவெடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் தான் இந்தியாவை ஆளும் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க மிகவும் தீவிரமான வேலையில் இறங்கியுள்ளது, அதன் முதற்படிதான் L முருகன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்தது, இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவிற்கு நேர் துருவ அரசியலில் உள்ள கட்சி திமுக, கொள்கை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர் அரசியலில் இருப்பது திமுகதான்.

Loading...

எனவே அதனை எதிர்த்து வலுப்பெறும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது, திமுகவில் காலம் காலமாக சில குடும்பங்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்திற்கு வருவதாக சொந்த கட்சியினர் இடையேயும் வருத்தங்கள் இருக்கிறது, இந்த நிலையில்தான் இரண்டாம் நிலையில் உள்ள திமுகவை சேர்ந்த தலைவர்களை கட்சிக்குள் இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

அதில் வட தமிழகம், தென் மாவட்டங்களில் உள்ள திமுகவை சேர்ந்த பெரும்பாலான நபர்கள் கட்சி தலைமை மீது எதிரான மனோபாவத்தில் இருப்பதாகவும் அவர்கள் தேர்தல் நேரத்தில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது, இதனையடுத்து தான் திமுக துணை பொது செயலாளர் வி பி துரை சாமி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அதோடு மட்டுமல்லாமல், பல தலைவர்கள் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும் குறிப்பாக ஊராட்சி அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் பலர் இணைய இருப்பதாகவும் இதற்காக மாநில அளவில் தனியாக கட்சியின் முக்கிய தலைவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் ஒருவரே ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ள நிலையில் திமுகவில் அடிமட்ட தலைவர்களின் நிலையை அறிந்தால் இன்னும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் விரைவில் சென்னையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் திமுக முக்கிய புள்ளியும் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலால் திமுக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாம்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*