கட்சியில் பதவி தருவதாக பெண்ணை நாசம் செய்த திமுக இளம்தலைவர் வீடியோ வெளியானது !

மதுரை.

Loading...

மதுரை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக பொறுப்பாளர் கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை வேட்டையாடி வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் ஆட்சியில் இல்லாத போதே திமுக தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, பிரியாணி கடை தொடங்கி பல இடங்களில் மோதலில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

மதுரையை சேர்ந்த திமுக ஐ டி விங் பொறுப்பாளர், பெண்ணுடன் உடன் இருந்த புகைப்படத்தை அனைவரும் இருக்கும் வாட்டசாப் குரூப்பில் பகிர்ந்து பெண்னின் வாழ்க்கைக்கு வேட்டு வைத்துள்ளார். அத்துடன் பெண்ணின் குடும்பத்தினர் அவரை துரத்தி விடவே வேறு வழியின்றி தற்போது தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் விதமாக தற்போது திமுகவின் மதுரை சம்பவம் அமைந்திருப்பது இந்திய அளவில் திமுக பெண்களுக்கு பாதுகாப்பான கட்சியா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதற்கு கனிமொழி போன்ற பெண்ணியம் பேசும் தலைவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் விவாதம் நடத்துமா இல்லை மூடி மறைக்குமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*