Connect with us

#24 Exclusive

ஓட்டு போட்டால் பொங்கலுக்கு வெள்ளை அடிக்க ஏணி தரும் திமுக.கோவை அருகே சுவாரஸ்யம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சியினர் பரபரப்புபாக செய்து வருகின்றனர்.பல தடைகளை தாங்க பல ஆண்களுக்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.அதற்கான தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் நிறைவு பெற்றது.அறிவிக்கபட்ட தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் தற்போது அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஜெயலலிதா,கருணாநிதி என்ற தமிழகத்தின் இருப்பெரும் தலைவர்கள் மறைவிற்கு பின் நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் என்பதால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர் இடையே தேர்தலில் வென்று பதவியை கைபற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.இன்னும் சொல்லப்போனால் தங்கள் தலைவர்களை இழந்த பின்னர் அந்த அந்த கட்சிகளுக்கு தலைமை ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோர்க்கு இது யார் பலசாலி என்பதை காட்டக்கூடிய தேர்தல் ஆகும்.ஜெயலலிதா,கருணாநிதி மறைவிற்கு பின் மக்கள் யாரை ஆதரிக்க உள்ளனர் என்பதை வெளிக்காட்ட கூடிய தேர்தல்.அடுத்த ஆண்டு வர இருக்கும் சட்டமன்றத்தேர்தலுக்கான முன்னோட்டமாக அரசியல் கட்சிகளும் அரசியல் வல்லுநர்களும் நடைபெற இருக்கும் உள்ளாட்சித்தேர்தலை பார்க்கின்றனர்.இதனால் அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் தேர்தல் ஜூரம் நிலவிவருகிறது.

இந்நிலையில் கோவையை அடுத்த காரமடையில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் வரும் பொங்கலுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் வெள்ளை அடிக்க ஏணி தரப்படும் என திமுக சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

Loading...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்காரம்பாளையத்தில் திமுக சார்பில் ரங்கராஜன் என்பவர் போட்டியிடுகிறார்.இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காரமடை புறநகர் பகுதிகளான கன்னார்பாளையம்,கருப்பராயன் கோவில் போன்ற பகுதிகளுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வாகனங்கள் மூலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Loading...

அப்போது சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு போட்டியிடும் ரங்கராஜன்க்கு கிராமத்திற்குள் வாக்கு சேகரித்த போது தேர்தலில் போட்டியிடும் ரங்கராஜன் மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தலில் வாக்களித்தால் வரும் பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஏணி வழங்கப்படும் என கூறி ஓட்டு கேட்கப்பட்டுள்ளது.

Loading...

Trending