Connect with us

#24 Exclusive

தந்தி டிவியை புறக்கணியுங்கள் திமுகவினருக்கு திடீர் உத்தரவு இதுதான் காரணமா?

சமூகவலைத்தளம் :- தமிழகத்தின் முன்னணி ஊடகமான தந்தி தொலைக்காட்சியில் இனி நடைபெறும் விவாதங்களில் திமுகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என திமுக தலைமை தனது அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஊடகங்கள் இரவு நேரங்களில் முக்கிய அரசியல் கட்சிகள் பங்களிப்புடன் விவாதம் நடத்துவது வழக்கம், அந்த வகையில் தந்தி தொலைக்காட்சி முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள முரசொலி நிலவிவகாரம் பஞ்சமி நிலமா என்பது குறித்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்தது,

இதில் டெல்லியில் SC/ST ஆணையத்தில் முரசொலி நிலம் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று புகார் அளித்த Prof ஸ்ரீனிவாசன், திமுக சார்பில் வழக்கறிஞர் சிவ ஜெயராஜ், கம்யூனிஸ்ட் சார்பில் Profஅருணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Loading...

காரசாரமாக நடைபெற்ற விவாதத்தில் புகாரினை அளித்த ஸ்ரீனிவாசன் அவர்கள் திமுக மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் அதற்கு திமுக சார்பில் ஜெயராஜ் அவர்கள் பதிலளித்தார் அப்போது பேசியவர் தமிழரசன் கேள்விக்கு பதில் சொல்லும் போது, முரசொலிக்கு முன்பு அங்கு ஆதிதிராவிட விடுதி இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் அது தனியாருக்கு சொந்தமானது என கூற.,

Loading...

அந்த தகவல் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது, மேலும் திமுகவிற்கு அது கடும் சிக்கலை தலித் மக்களிடையே ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்ட நிலையில், திமுக தலைமை விவாதத்திற்கு ஏற்பாடு செய்த தந்தி டிவி நிகழ்ச்சியில் இனி திமுக சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைமை இந்த உத்தரவின் மூலம் இனி வேறு எந்த ஊடகங்களும் முரசொலி குறித்து விவாதம் நடத்தக்கூடாது என மறைமுக மிரட்டல் விடப்பட்டுள்ளகாகவும், பஞ்சமி நிலம் குறித்து பேச்சுக்கள் எழாமல் இருக்கவே இது போன்ற நடவடிக்கையில் திமுக தலைமை ஈடு பட்டுள்ளதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்ட ஊடகத்தை என்றும் புறக்கணிக்காமல் மொத்தமாக ஊடகத்தில் பங்கேற்பது இல்லை என முடிவு எடுத்து பின்பு தங்கள் முடிவை மாற்றி கொண்டனர் ஆனால் குறிப்பிட்ட ஊடகங்களை என்றும் புறக்கணித்தது இல்லை, ஆனால் திமுக இவ்வாறு செய்திருப்பது பஞ்சமி நிலத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் ரஜினி குறித்த விவாதத்தை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்காக திமுக தலைமை இதுபோன்ற முடிவுகளை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending