#BREAKING பிரபல ஆபாச இணையதளத்தை நடத்தி வந்த திமுகவினர் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தமிழகம் விரைகிறது சிறப்பு குழு.

#BREAKING பிரபல  ஆபாச இணையதளத்தை நடத்தி வந்த திமுகவினர்  விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தமிழகம் விரைகிறது சிறப்பு குழு.

சென்னை.,

சென்னையில் இன்ஜினியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் கைதான மூவரில் தமிழ்செல்வம் எனும் நபர் செய்துவந்த சமூகத்திற்கு புறம்பான சம்பவங்கள் தற்போது காவல்துறையினர் விசாரணையின் போது வெளியாகி இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

Loading...

நான் எனது வீட்டில் இருந்து வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு செல்ல ‘ரேபிடோ செயலி’ ஆண்ட்ராய்டு செயலி மூலம், ‘பைக் டாக்சி’-க்கு பதிவு செய்தேன். ஆனால் நீண்டநேரமாக பைக் டாக்சி வரவில்லை. சற்றுநேரத்தில் கார் ஒன்று வந்தது. மழையாக இருப்பதால் எங்கள் நிறுவனம் சார்பில் காரை அனுப்பிவைத்தனர் என்று அதை ஓட்டிவந்த டிரைவர் தெரிவித்தார்.

Loading...

நானும் அதை உண்மை என்று நம்பி காரில் ஏறினேன். ஆனால் கார் வடபழனி நோக்கி செல்லாமல் கிண்டி நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவர்களிடம், ‘நான் வடபழனி செல்ல வேண்டும், காரை ஏன் கிண்டி நோக்கி ஓட்டுகிறீர்கள்’ என்று கேட்டேன்.

அப்போது காரில் வந்தவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டினார்கள். நான் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை அவர்கள் பறித்துக்கொண்டனர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்றும், கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார்கள்.

பின்னர் எனது ஆடைகளை களைந்து என்னை நிர்வாணப்படுத்தினார்கள். எனது நிர்வாண கோலத்தை செல்போனில் வீடியோ படமாக எடுத்தனர். பின்னர் என்னை காரில் அழைத்து சென்று எனது வீட்டின் அருகே நிறுத்தி இறக்கிவிட்டனர். அப்போது என்னை நிர்வாணமாக எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றும், இதைப்பற்றி போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என்றும், மேலும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்றும் அவர்கள் மிரட்டிவிட்டு சென்றனர்.

பின்னர் அதே கும்பலைச் சேர்ந்த ஒருவர் எனது செல்போனில் பேசி ரூ.50 ஆயிரம் பணத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஸ்ரீகுமாருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் ஸ்ரீகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய நபரின் முகவரி தெரியவந்தது. அவரது பெயர் சரவணன் (23) என்றும், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பக்கிரி தோட்டம், 3-வது குறுக்கு தெருவை சேர்ந் தவர் என்றும் தெரியவந்தது.

சரவணனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் ‘ரேபிடோ’ பைக் டாக்சி நிறுவனத்தில் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த காண்டிராக்டர் தமிழ்செல்வன் (26), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32) ஆகியோரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கத்தி, ரூ.11 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் தமிழ்செல்வன் தி.மு.க. பிரமுகர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சரவணன், ஸ்ரீகுமாரை ஏற்கனவே பலமுறை பைக் டாக்சி மூலம் வெளியில் அழைத்து சென்றுள்ளார். ஸ்ரீகுமாரை கடத்திச்சென்று பணம் பறிக்கலாம் என்று சரவணன் தான் திட்டம் திட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில் சரவணன் தனது நண்பர்களான தமிழ்செல்வன், மணிகண்டன் ஆகியோரின் உதவியோடு கடத்தல் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தக்வல்கள் கிடைத்துள்ளன, இவர்கள் இதுபோன்று ஏராளமானவர்களை குறிவைத்து வீடியோ எடுத்திருப்பதும் அதனை தங்களது மொபைல் போன் மூலம் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் ஆண்கள் ஆபாச இணையதளம் ஒன்றிணை கனடா நாட்டின் சர்வேர் உதவியுடன் தொடங்கி நடத்திவந்திருப்பதும் அதன் மூலம் மாத வருமானமாக பல லட்சங்களை சம்பாரித்து வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்து தற்போது இந்திய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக பெரிய அளவில் இதில் பலரும் சம்பந்த பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுவதால் மத்திய புலனாய்வு குழுவினர் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இந்த சம்பவம் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போதுவரை இந்த குற்றத்தை செய்த திமுகவினரை கட்சியில் இருந்து நீக்காமல் திமுக அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *