திமுகவில் உண்டானது மோதல் ! சபாஷ் சரியான போட்டி !!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள திமுகவினர் மற்றும் கூட்டணி தலைவர்களை வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு சிறப்பாக தயார் செய்யும் பொறுப்பை பிரசாந்த் கிஷோர் என்பவர் நடத்தும் தனியார் அமைப்பிடம் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்து பொறுப்பை ஒப்படைத்தார்.

Loading...

அந்த குழு சமூக வலைதளங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ்ஜை உயர்த்துவது, எதிர்க்கட்சிகள் மீது குற்றசாட்டை பரவலாக்குவது, குறிப்பிட்ட ஊடகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவது விவாதம் செய்வது போன்ற செயல்களில் இறங்கி இருக்கிறது.

அதே நேரத்தில் திமுகவில் உள்ள சிலரே ஸ்டாலினுக்கு தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ வேட்டு வைப்பதாக இப்போது பிரசாந்த் கிஷோர் தரப்பு ஸ்டாலினிடம் அறிக்கை கொடுத்துள்ளது, அதில் முக்கியமாக குறிப்பிட்ட விஷயங்கள் என்னவென்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம் வாக்குகள் நிச்சயம் நம்மை வந்து சேரும் அதிமுக பக்கம் செல்லமாட்டார்கள்.

Loading...

அதே நேரத்தில் இந்துக்கள் வாக்கு வங்கியில் நமக்கு சில சிக்கல்கள் எழுந்துள்ளன, எனவே அதனை சமுதாயக ரீதியாக கணக்கிட்டால் தலித் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் மூலம் பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்தினோம், ஆனால் அதனை தயாநிதி மாறன் கெடுத்து விட்டார் என வேதனை பட்டு இருக்கிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்னர் தலைமை செயலாளரை சந்தித்த திமுக எம் பி கள் குழு ஒன்றிணைவோம் வா என்று திமுக தொடங்கிய விழிப்புணர்வு குழுவிற்கு உதவி கேட்டு வந்தவர்கள் விபரங்களை அளிக்க சென்றபோது தலைமை செயலாளர் தங்களை அவமானப்படுத்தியதாக டி ஆர் பாலு தலைமையிலான குழுவினர் ஊடகங்களை சந்தித்து முறையிட்டனர்.

அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிய தயாநிதி மாறன் நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா அவரை போல தாழ்த்தப்பட்டவர்களா என தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டார், இப்போது அதற்கு மிக பெரிய எதிர்ப்பு கிளம்ப்பியுள்ளது. தலித் அமைப்பை சேர்ந்த பலரும் தயாநிதி மாறன் நேரடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் வேறு வழியின்றி பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தயாநிதி மாறனை கண்டிக்கும் நிலைக்கு சென்றுள்ளது, இந்த நிலையில்தான் இனி தலித்துகள் மத்தியில் திமுக தலித்துகளுக்கு ஆதரவான இயக்கம் என்று எவ்வாறு சொல்வது என பி கே தரப்பு ஸ்டாலினிடம் வேதனை பட்டுள்ளது.

அதனையடுத்து ஸ்டாலின் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட எதிலும் இனி எந்த எம் பி மற்றும் கட்சி நிர்வாகிகள் வீடியோ அல்லது பதிவோ கருத்தோ சொல்ல கூடாது எனவும் தலைமை அறிவுறுத்தும் கருத்துக்களை மட்டும் கூறினால் போதும் என்று குறிப்பிட்டுள்ளார், இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை தவறாக விமர்சனம் செய்த ஆர் எஸ் பாரதியை ஓரம்கட்டியது போல் தயாநிதி மாறனும் ஓரம்கட்டப்பட்டு உட்கார வைக்கப்படுவாரா என்று திமுகவில் பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில்தான் திமுகவில் அழகிரி இருந்த போது ஏற்பட்ட குடும்ப சண்டைபோல் ஏதேனும் உருவாகி அது வருகிற தேர்தலில் தனது முதல்வர் கனவிற்கு எதிராக முடித்து விடுமோ என ஸ்டாலின் நெருக்கமானவர்களிடம் வேதனைப்பட்டுள்ளாராம், ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமராவிடமல் தடுப்பதற்கு வெளியில் ஆள் தேவையில்லை உள்ளேயே இருக்கிறார்கள் என்று திமுகவினர் புலம்புகின்றனர்.

இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், விவாதங்களில் கலந்து கொள்பவர்கள், பாஜக, அதிமுகவை நேரடியாக தாக்கி பேசவும் அதே நேரத்தில் மதம் குறித்தோ தனிப்பட்ட தலைவர்கள் குறித்தோ பேசவேண்டாம் என அருவுறுத்தியுள்ளாராம்.

தேர்தல் வரும் நேரத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ? சபாஷ் சரியான போட்டி என எதிர்தரப்பினர் ஆர்வமுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*