மோசம் போயிட்டோம் சித்தப்பு நம்ம ஆளும் கைதட்டிபுட்டாரு அதிர்ச்சியில் திமுகவினர் !

மோசம் போயிட்டோம் சித்தப்பு நம்ம ஆளும் கைதட்டிபுட்டாரு அதிர்ச்சியில் திமுகவினர் !

Loading...

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில் சரியாக இன்று மாலை 5 மணிக்கு கொரோனா வைரஸை எதிர்த்து போராடிவரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு இடங்களில் மக்கள் வீட்டு வாசலில் கூடி கைதட்டி ஆதரவளித்தனர் , சிறுவர்கள் உற்சாகமாக கைகள் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படித்தினர், மேலும் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் கைதட்டி ஆதரவளித்தனர்.

Loading...

தமிழகத்தில் கைதட்டல் பெரிய அளவில் இருக்காது என திமுகவினர் எதிர்பார்த்து இருந்தனர் இந்த நிலையில் பிரதமரின் கோரிக்கைக்கு பெரும்பாலான தமிழர்கள் ஆதரவளித்தனர், வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ் பார்த்தாலே 10- ல் 7 நபர்கள் ஆதரவளித்தது தெரிந்துகொள்ளலாம், இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த முதல்வரும் கைதட்டி ஆதரவளித்தார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி தனது வீட்டு வாசலில் நின்று கைதட்டி பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார், கைதட்டினால் என்ன நடக்கும் என திமுகவினர் சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்துவந்த நிலையில் கூட்டணி கட்சி முதல்வரே கைதட்டி ஆதரவளித்திருப்பது..,

சந்தானம் படத்தில் வருவது போன்று மோசம் போயிட்டோம் சித்தப்பு என திமுகவினர் பேசுவது போன்று எதிர்தரப்பினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.  கூடுதல் செய்தி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 144 தடை உத்தரவினை உள்துறை அமைச்சகம் தற்போது விதித்திருக்கிறது, மேலும் உத்தரவு உடனடியாக அமலாவதாக தெரிவித்துள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*