Connect with us

அரசியல்

கோமாவில் க அன்பழகன் – திமுக தொண்டர்கள் வருத்தம் !

திமுகவின் பழம்பெரும் தலைவரான க அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் அவர் தற்போது கோமா நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் திமுக பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என சொல்லப்படுகிறது. அவர் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக கோவமா நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திமுக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்து வருகின்றனர்.

Loading...

கடந்த இரு தினங்களாக திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அன்பழகனின் உடல்நிலையை பற்றி விசாரித்தார். 97 வயது அன்பழகன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக வின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
Loading...

Trending