இங்கிலாந்தில் பணம் கட்டாமல் ஓடிவந்த திமுக ! உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா ! அடுத்த பரபரப்பு

தமிழக பா.ஜ.க செய்தித்தொடர்பாளரும், இளைஞரணி துணைத்தலைவருமான SG சூர்யா ஒரு பரபர்ப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கீழ்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.

Loading...

முன்னாள் மத்திய கேபினட் செயலாளர் TSR சுப்ரமணியம் “ஜர்னிஸ் த்ரூ பாபுடம் அண்ட் நேத்தாலாண்ட்” என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டு இருந்தார் எனவும், அந்த புத்தகத்தில் ஒரு சுவாரஸ்ய தகவலை எழுதியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

1970-களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் லண்டன் அருகில் உள்ள டார்செஸ்டர் ஹேட்டலில் தங்கி, பணமும் கட்டாமல் காரணமும் சொல்லாமல் தப்பித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் பிரிட்டன் பவுண்ட் 17,000 அந்த பில் தொகை என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Loading...

அப்போது அந்த ஹோட்டல் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இந்த தகவலை தெரிவித்துள்ளது அதில் ஒருவரும் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துக் கொள்ள வில்லை என்றும், பல சர்வதேச தலைவர்கள், தஞ்சம் புகுந்தவர்கள் தங்களால் பணம் செலுத்த இயலவில்லை எனினும் அதை தெரிவித்து பின்நாட்களில் பணம் செலுத்திய சம்பவம் உண்டு, ஆனால் இதுபோல் ஒருவரும் பணம் செலுத்தாமல் ஓடிப்போக வில்லை என்றும், இப்போதும் கூட இந்த தகவல் இந்த சரித்திர சம்பவத்தை தெரிவிக்க தானே தவிற, பணத்தை திரும்பிக்கேட்க இல்லை என்றும் எழுதி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திய தூதரகம் அந்த பணத்தை செலுத்தி அடைத்ததாகவும், இந்த சம்பவம் குறித்து அப்போதைய வெளியுறவு செயலாளர் TN கவுல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் தெரிவித்ததாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுகவிற்கு மிசா, பஞ்சமி நிலம் என ஏகப்பட்ட இடையூறுகள் வரிசையாக வெளிவந்த நிலையில் தற்போது வரலாற்று நிகழ்வுகளை தேடி பிடித்து பாஜகவினர் அதிரடியில் ஈடுபடுவது எதுபோன்ற தாக்கத்தை உள்ளாட்சி தேர்தலில் ஏற்படுத்த போகிறது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனால் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு பணம் கட்டாமல் ஓடிவந்தது மட்டுமல்லாமல், இந்தியர்களின் மானத்தையும் சேர்ந்து கெடுத்த திமுகவினரின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
About Tnnews24 2662 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*