விடுதலை சிறுத்தையாக உருமாறும் பிரசன்னா அப்போ வெளியான தகவல் அனைத்தும் உண்மைதானா?

விடுதலை சிறுத்தையாக உருமாறும் பிரசன்னா   அப்போ வெளியான தகவல் அனைத்தும் உண்மைதானா?

விடுதலை சிறுத்தையாக உருமாறும் பிரசன்னா அப்போ வெளியான தகவல் அனைத்தும் உண்மைதானா?

சமூகவலைத்தளம்.

திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா குறித்து தற்போதெல்லாம் அதிகமான செய்திகள் வெளிவருவது இல்லை மாறாக அடிக்கடி ஊடக விவாதங்களில் பங்கேற்று திமுகவின் சார்பில் படு விமர்சையாக பதில் அளிப்பவர் பிரசன்னா ஆனால் சமீபகாலமாக அவர் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படவில்லை என்றும் முன்புபோல் கட்சியில் முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்றும் பலரும் கிசு கிசுத்து வந்தனர்.

Loading...

இந்த செய்தியை காவிரி தொலைக்காட்சியில் தடம் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரசன்னாவிடம் நெறியாளர் நேரடியாக கேள்விகளை கேட்டார், உதயநிதி ஸ்டாலின் வந்ததில் இருந்து தமிழன் பிரசன்னா ஓரம் காட்டப்படுகிறாரா, உங்களுக்கு உரிய மரியாதை முன்புபோல் கிடைக்கிறதா என்ற பல்வேறு கேள்விகளை நெறியாளர் கேட்க?

Loading...

அப்போது வடைவித்த கதையில் தொடங்கி பிரசன்னா பல்வேறு தகவல்களை சொன்னாரே தவிர நேரடியாக பதில் சொல்லவில்லை, மேலும் கருணாநிதி மறைவிற்குப்பிறகே பிரசன்னாவின் முக்கியத்துவம் குறைந்து வருவதாக கூறப்பட்டது, துரைமுருகனிடம் உரசல் என பல்வேறு தகவல்கள் பரவின.

ஆனால் என்று ஆபாச வீடியோ வெளியானதோ அன்றில் இருந்தே பிரசன்னாவிற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளப்பியது மேலும் ஆபாச வீடியோ விவகாரத்தை உள்கட்சியை சேர்ந்த சிலரே திட்டமிட்டு வெளியிட்டு காய் நகர்த்தியதாக கூறப்பட்டது, பிரசன்னா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று மறுத்து காவல் ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தார்.

இதெல்லாம் பழையக்கதை ஆனால் தற்போது பிரசன்னா முழுவதும் கட்சிக்குள் ஓரம் காட்டப்படுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்களே பேச தொடங்கியுள்ளனர், முன்பு போல் எந்த கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை, வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மேடை ஏறாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சுட்டி காட்ட பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரசன்னா திமுகவில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் உலாவருகின்றன, இவற்றிற்கு பின்னணியில் அழகிரியை விவாதம் ஒன்றில் கடுமையாக பிரசன்னா விமர்சனம் செய்ததும் ஒரு முக்கிய காரணமாக பேசப்படுகிறது.

ஒரு காலத்தில் பிரதமரை தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்த பிரசன்னா தற்போது சொந்த கட்சியிலேயே ஓரம் கட்டப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தால் பிரசன்னா எதிர்காலம் என்ன என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

அப்போ பிரசன்னா கட்சி மாறப்போகிறார் என்று வெளியான தகவல் உண்மைதானா? அதனை குறிப்பிட்டுதான் பிரசன்னா இந்த புகைப்படத்தை பதிந்தாரா?

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *