உயிர் போகலாம் பணி மாற்றம் செய்யப்படலாம் கதறும் பிரசன்னா, கண்டுகொள்ளாத உதயநிதி

திமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான பிரசன்னா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார், கடந்த ஆண்டு பிரசன்னா பெயரில் வீடியோ ஒன்று வெளியான நிலையில் அன்றில் இருந்து பெரும்பாலான தொலைக்காட்சிகள் முக்கிய விவாதங்களில் அவரை அழைப்பதை குறைத்து கொண்டன.

Loading...

பிரசன்னா பலமுறை அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று விளக்கம் கொடுத்த நிலையிலும் அவரை பலர் நம்ப தயாராக இல்லை, அதனை போன்று திமுகவின் குடும்ப விவகாரங்களில் தலையிட்டு அழகிரி அவரது மகன் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அப்போதே அவரை மூத்த நிர்வாகிகள் கண்டித்தனர் வயதிற்கு ஏற்றார் போல் பேசு எனவும் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.

இதுவரை பிரசன்னாவின் வாழ்க்கை அரைகுறையாக ஓடியது ஆனால் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவின் பேச்சினை விரும்பவில்லை எனவும் தன்னுடன் ஒப்பிடும் நிலையில் பிரசன்னா பல கூட்டங்களில் பேசியதை அவர் விரும்பவில்லை எனவும் கட்சியினர் மத்தியிலேயே பேசப்பட்டது அதனையடுத்து பல கூட்டங்களுக்கு பிரசன்னாவிற்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை.,

Loading...

மதன் நேர்காணல் ஒன்றில் கூட ப்ரசன்னாவிடம் இந்த கேள்வியை கேட்க அதற்கு மழுப்பலாக பதில் ஒன்றையும் அளித்து விவாதத்தை முடித்து கொண்டார், இந்த நிலையில் நேரடியாக உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் பிரசன்னா, ஆனால் அதன் பிறகும் அவரை நிர்வாகிகள் ஏற்கவில்லை..,

இந்நிலையில்தான் வேறு வழியின்றி தெருக்கூட்டங்களில் பேசும் முடிவெடுத்தார் பிரசன்னா அதில் தற்போது நல்ல லாபம் கிடைப்பதாகவும் பிரதமரையும், இந்து மதத்தையும் விமர்சனம் செய்தால் கூடுதல் சன்மானம் கிடைப்பதாகவும் செய்திகள் வெளியாகின, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் பிரசன்னா ஒரு கூட்டத்தில் பேச இஸ்லாமியர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார் என்று தெரிவிக்க சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக சமீபத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றது குறித்து விமர்சனம் செய்துள்ளார், அதில் “”” தீர்ப்புகள் விற்கப்பட்டால் ஆளுநர் ஆகலாம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம் …””
“””எதிர் கேள்வி கேட்டால்
உயிர் போகலாம்
பணியிடை மாற்றம் செய்யப்படலாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பிரசன்னா இதனை வழிகளில் தனது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும் நிலையிலும் அவரை உதயநிதி ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லையாம், மாறாக அவரது பொறுப்புகள் விரைவில் மாற்றம் செய்யப்பட்டு அடிப்படை உறுப்பினர் பதவியில் அவரை அமர வைக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*