திமுகவிற்கு அடுத்த பேரதிர்ச்சி என்ன செய்ய போகிறது திமுக தலைமை?

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன, திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத சூழலில் வருகிற பொது தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கனவில் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறது.

Loading...

அதன் ஒரு பகுதிதான் பிரபல அரசியல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் குழுவை ஒப்பந்தம் செய்து அதற்கு ஏற்றவாறு அரசியல் நிலைப்பாடுகளில் அடியெடுத்து வைத்து கொண்டுள்ளது, இந்த நிலையில் ஆளும் கட்சியான அதிமுக அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கவுள்ளது.

இந்நிலையில் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக இந்த முறை 30 எம் எல் ஏ சீட்டினை எப்படியாவது பெறவேண்டும் என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கியுள்ளது, எனவே திமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை இணைத்து, இந்த முறை எதிர் தரப்பிற்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுக்கலாம் என கணக்கு போட்டுள்ளது.

Loading...

அந்த வகையில் பாஜக இப்போது குறிவைத்துள்ளது, கோவை, மதுரை, இராமநாதபுரம், பரமக்குடி, திருப்பூர், ஆகிய பகுதிகளை கணக்கு வைத்து அதிருப்தியில் இருக்கும் எதிர்தரப்பினரை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, அதன் ஒருவகையில் தான் திமுக துணை பொதுச்செயலராக இருந்த வி பி துரைசாமி பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மு க அழகிரி ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதன் மூலம் தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு நபர்கள் பாஜகவில் ஐக்கியமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது, ரஜினி அரசியல் இயக்கம் தொடங்கினால் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என இருந்த அழகிரி ரஜினி இப்போது வருவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் பாஜகவில் இணைவது உறுதியாகிவிட்டதாம்.

மேலும் பலமுறை திமுகவில் இணைவதற்கு அவர் முயற்சி செய்த நிலையில் அதற்கான வாய்ப்பு மறுக்கப்படவே இனியும் காலம்தாழ்த்தினால் அரசியலில் அடையாளம் தெரியாமல் சென்றுவிடுவோம் எனவும் தனது ஆதரவாளர்கள் அரசியல் எதிர்காலம் கருதி பாஜகவில் இணைய முடிவு எடுத்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக திமுகவில் முத்த தலைவர்கள் பாஜக பக்கம் செல்வது திமுகவிற்கு பலவீனத்தை கொடுக்காது என கணக்கு போட்டு ஸ்டாலின் பெரிதாக அலட்டி கொள்ளாத சூழலில் ஒருவேலை தேர்தல் களம் இந்து வாக்கு வங்கியை வைத்து திசை மாறினால் அது எந்த வகையிலாவது திமுகவிற்கு எதிராக அமைந்துவிடுமோ எனவும் கலக்கத்தில் உள்ளாராம்.

முக அழகிரி பாஜகவில் இணைந்தால் நிச்சயம் பாஜகவிற்கு பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் பாஜக முழு அளவில் களத்தில் பணியாற்றினால் முடிவு சாதகமாக அமையும் எனவும் கூறப்படுகிறது, பாஜகவின் தேர்தல் வியூகத்தை திமுக தலைமை எவ்வாறு கையாள போகிறது, ஒருவேலை இந்து வாக்கு வங்கியை முன்னிறுத்தி தேர்தல் திசை மாறினால் திமுக நிலைமை என்னவாகும்?

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*