சுற்றிவளைத்த மக்கள் பின்வாசல் வழியாக காரில் ஏறி தப்பித்த திமுக எம் பி, சவால்விட்ட ஜோதிமணி எங்கே? வீடியோ இணைப்பு

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூர் மக்களவை எம் பி ஜோதிமணி, விவாதத்தின் போது எதிர்கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் இறங்கி வேலைபார்ப்பதாகவும் அதனால்தான் மக்கள் அமைதியாக இருப்பதாகவும், இல்லை என்றால் பிரதமரை கல்லால் அடித்து விரட்டி இருப்பார்கள் என சர்ச்சையாக விமர்சனம் செய்தார்.

Loading...

அதற்கு பாஜகவை சேர்ந்த கரு நாகராஜன் பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்யும் ஜோதிமணி ஒரு எம் பி யா இல்லை தரம் தாழ்ந்த பெண்மணியா என தெரியவில்லை எனவும் தமிழ்நாட்டில் மக்கள் உங்கள் மீதுதான் கோவத்தில் இருக்கிறார்கள் கொரோனாவிலும் அரசியல், தொகுதிக்கு சென்றுபாருங்கள் தெரியும் என பொருள்பட தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் நாமக்கல் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற திமுக எம் பி சின்ராஜு தனது தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோடு பகுதியில் நிவாரண உதவிகள் எந்த வகையில் நடைபெறுகிறது என பார்வையிட சென்றார், அப்போது அவரை சூழ்ந்த பொதுமக்கள், கடந்த 55 நாட்களாக நாங்கள் எப்படி இருக்கிறோம் என எந்த உதவியும் செய்யவில்லை.

Loading...

எங்கு இருந்தீர்கள், வாக்கு கேட்டு வரும்போது என்ன உறுதிமொழி கொடுத்தீர்கள் எனக்கேட்டு அவரை துளைத்து எடுத்துவிட்டனர், ஊடகங்கள் இருந்த காரணத்தால் அவருடன் இருந்த எம் பி ஆதரவாளர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர், ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாகிவருவதை அறிந்த எம் பி காரில் ஏறி பின்வாசல் வழியாக சென்றுவிட்டதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் திமுக எம்.பி கள் பொது மக்கள் கேள்விக்கு பயந்து கூட்டங்களை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது, ஜோதிமணி போன்றவர்கள் சவால் விட்ட நிலையில் தமிழகத்தில் நிலை என்பது இப்போது தெரிகிறதா எனவும் ஜோதிமணி எங்கே இங்கு பாருங்கள் உங்கள் கூட்டணி நிலையை என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*