மேலும் ஒரு முக்கிய திமுக எம் பி சிக்கினார் !! 2ஜி வழக்கை காட்டிலும் மிக பெரிய மணி லாண்டரி !!

தமிழக ஊடகங்கள் மிகவும் வெளிப்படையாக பேசாத சம்பவம் கடந்த இரண்டு வாரங்களில் அரங்கேறியுள்ளது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறைக்கு திமுக எம் பி கள் அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் மற்றும் பினாமி குறித்த விளக்கங்களுடன் ஒரு கடிதம் வருகிறது.

Loading...

அதனை முழுமையாக படித்த அமலாக்க துறை அதிகாரிகள் அதில் உள்ள நபர்கள் பெயரில் முதலாவதாக இருந்த ஜெகத்ரட்சகனின் சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் அதிரடியாக 16 குழுக்களாக சோதனை நடத்தி இருக்கின்றனர், அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் 65 கோடி அளவிற்கு கணக்கில் வராத சொத்துக்களை ஜெகத்ரட்சகன் வைத்திருப்பது கண்டறியபட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது, இதன்படி நேற்று சென்னை நுங்கப்பாக்கம் அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராகியுள்ளார், அவரிடம் அமலாக்க துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை முதலீடுகள் குறித்தும் பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை திரட்டியுள்ளதாக கூறுகின்றனர்.

Loading...
ஜெகத்ரட்சகன்

விரைவில் இது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகலாம் எனவும் திமுகவின் மிக முக்கிய புள்ளியின் பல்வேறு சொத்து விபரங்கள் அமலாக்கத்துறைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது, இவை அனைத்தும் சொந்த கட்சியை சேர்ந்த நபரால் வெளியாகி இருக்கலாம் எனவும் அந்த நபர் யாராக இருக்கும் என திமுக தலைமை அரண்டு போயி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் பணம் கைபட்றப்பட்டது, தற்போது ஜெகத்ரட்சகன், உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் சிக்கிவருவது திமுக பற்றிய மிக பெரிய அதிர்ச்சி சம்பவம் ஏதும் தேர்தல் நேரத்தில் வெளியாகுமோ என்ற அச்சத்தை திமுக தலைமைக்கு உண்டாகியிருக்கிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3896 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*