Connect with us

#24 Exclusive

பணத்தை சுருட்டியதில் மல்லையாவை மிஞ்சிய திமுக பிரமுகர் சிக்கினார் ! வெளியானது அதிர்ச்சி சம்பவம்.

Published

on

பொதுமக்கள் பணத்தை வங்கிகளில் பெற்று முறையாக திரும்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்த விஜய் மல்லையா, மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து இங்கிலாந்து நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அதேபோல் திமுக பிரமுகர் ஒருவர் சாதாரண மக்களிடம் ஏலசீட்டு மற்றும் தங்கநகை சீட்டு பிடித்து பல கோடி ரூபாய் பணத்தினை சுருட்டி கொண்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் நகரம் 6-வது வார்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் முரளி, வட்டி முரளி என்ற அடைமொழியுடன் வலம் வந்தவர் திருக்கோவிலூர் கட்ட கோபுரம் வீதியில் ராகவேந்திரா ஜூவல்லரி என்ற கடையினை நடத்தி வருகிறார். தீபாவளி சீட்டு பொங்கல் சீட்டு என பலவிதமான சீட்டு கம்பெனி வைத்து பணத்தினை சுருட்டியுள்ளார்.

Loading...

அதுமட்டுமில்லாமல் ஏலச்சீட்டு வருடம் 5 லட்சம் 10 லட்சம் என கோடிக்கணக்கில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களிடம் பல கோடி மோசடி செய்த பணத்தின் மதிப்பு மட்டும் 60 கோடியை தாண்டும் என்கின்றனர்.

Loading...

முரளி நடத்திவந்த ராகவேந்திரா ஜுவல்லரியில் இருந்த நகைகளை இரண்டு நாட்களுக்கு முன்னர் 5 கட்டப் பைகளில் போட்டு எடுத்துக்கொண்டு செவ்வாய்கிழமை இரவு குடும்பத்துடன் தலைமறைவாகியிருக்கிறார், முரளியின் கடை இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதும் அவரது வீடு அடைத்திருப்பதும், செல்போனை தொடர்புகொண்டபோது அனைத்து வைத்திருப்பதை அறிந்த பலரும்..,

வட்டி முரளி புகைப்படம்

துடிதுடித்து போய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முரளி கடையில் இருந்த நகைகளுடன் பொதுமக்களின் பல கோடி பணத்தினை சுருட்டிக்கொண்டு தலைமறைவான சம்பவம் வெளிவந்துள்ளது, மல்லையாவின் கடன் தொகையுடன் ஒப்பிடுகையில் முரளி ஏமற்றிய பணத்தின் அளவு 1% கூட தேறாது ஆனால் ஒரு சிறிய நகரத்தில் சாதாரண சிறிய அளவு நகைக்கடை வைத்து சுற்றியுள்ள ஊர் மக்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடியது ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது சம்பவம் மல்லையாவை மிஞ்சிய அளவு இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, சீட்டு பணத்தை சுருட்டுதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முரளி சென்னையில் முக்கிய பிரமுகர் வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்பதனை அறிந்த காவல்துறையினர் சென்னை விரைந்துள்ளனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552