திமுகவின் மூத்த தலைவர் தற்கொலை…அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

திமுகவின் மூத்த தலைவர் தற்கொலை…அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

நாகை மாவட்டம் செங்கப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு வயது 50, மருத்துவராக இருந்து வருகிறார். இவர் நாகை மாவட்ட திமுக மருத்துவர் அணியின் பொருப்பாளராக இருந்து வந்தார். மேலும் இவர் பா.சிதம்பரம் மனைவி நளினியின் நெருங்கிய உரவினர் ஆவார். தனது மருத்துவமனைக்கு மாடியிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி வயது 45. இவர்களுக்கு அபர்னா(17) என்ற மகளும் இருக்கிறார். இவர் தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல, தனது மருத்துவமனைக்கு வந்து தனது பணிகளை கவனித்த ஆனந்த். மதியம் 2 மணிபோல தனது வீட்டிற்கு சென்று ள்ளார். பிறகு தனது மருத்துவமனையில் வேலை செய்யும் பணியாளர்களை அழைத்து அனைவருக்கும் சம்பளம் கொடுத்துள்ளார். அதற்கு பணியாளர்களோ, எப்போதும் 1 ஆம் தேதி தானே சம்பளம் கொடுப்பிங்க, இப்போ என்ன சார் முன்பே கொடுத்துட்டிங்கனு கேட்க, நான் சில நாட்கள் வெளியூர் செல்ல இருக்கிறேன் என்பதால் தான் என்று பதில் அளித்துள்ளார். பின்னர் மதியம் 2:30 மணிபோல தனது காரை எடுத்துக்கொண்டு புரப்பட்ட ஆனந்த், நாமக்கல்லில் இருக்கும் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அதன் பிறகு 4 மணியளவில் ஆனந்த் அவரது தோட்டத்தில் பினமாக கிடக்கிறார் என்று போலிசாருக்கு தகவல் வந்துள்ளது.இதனை தொடர்ந்து நாமக்கல் போலீஸ் சூப்பர்டண்ட் மற்றும் துணை போலீஸ் சூப்பர்டண்ட் உடனே சென்று விசாரணையை தொடங்கினர்.

போலீஸ் அங்கு சென்று பார்த்தபோது, தோட்டத்தில் உள்ள ஒரு சிறிய அறையின் அருகே, கழுத்தில் சுடப்பட்டு உட்கார்ந்த நிலையில் ஆனந்த் பிணமாக கிடந்தார். அருகில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அதனால் ஆனந்த் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸ், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் ஆனந்த் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது பற்றி இன்னும் தெரியலில்லை. அதனால் போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனந்த் தோட்டத்துக்கு வந்த பிறகு அவரது உறவினர் ஒருவருக்கு போன் பேசியுள்ளார். அதனால் போலிசார் அவரை விசாரித்து வருகின்றனர். மேலும் ஆனந்தின் மனைவி கோவை சென்றுள்ளார், அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனால் அவர் வந்ததும் இந்த தற்கொலைக்கான காரணம் என்பது பற்றி போலிசார் விசாரிக்க உள்ளனர்

Loading...
Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *