Connect with us

#24 Exclusive

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு ! உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக !

Published

on

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு ! உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக !

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. சார்பில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்துள்ளார். மேலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் அவர் ஈடுபட்டார். இதற்கு அதிகாரிகளும் துணையாக இருந்தனர். எனவே, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்டாலினுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.

Loading...

இந்த தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த 2017-ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி விசாரித்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு பதில் மனு தாக்கல் செய்யுமாறு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கில் சைதை துரைசாமி சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்து ஸ்டாலின் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.

Loading...

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த மாதம் நவம்பர் இறுதியில் வர இருக்கிறது, இதில் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பணத்தை செலவு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து முழுமையான தகவலை பாஜக சார்பில் திரட்டியுள்ளதாம்.

மேலும் அப்போது துணை முதல்வராக ஸ்டாலின் இருந்து செய்த அதிகார துஸ்பிரயோகம் குறித்து அரசு அதிகாரிகள் மூலமே வாக்குமூலங்கள் பெறப்பட்டு இவை அனைத்தும் முழுமையான முறையில் சேகரிக்கப்பட்டு உள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்டாலினுக்கு வருத்தம் தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி இணைந்து ஸ்டாலினுக்கு எதிராக வாதாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிதம்பரத்தை தொடர்ந்து ஸ்டாலினும் சிறை செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், வழக்கில் ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவர் வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைத்து பதவிகளும் காலியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் அப்போ உதயநிதியா? முன்பே கணித்துதான் ஸ்டாலின் உதயநிதியை அரசியல் களத்தில் இறக்கினாரா?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending