Connect with us

Uncategorized

காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்… காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து ஸ்ரீநகரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக….

ஜம்மு காஷ்மீற்கு வழங்கப்பட சட்டப்பிரிவு 370 தை மத்திய அரசு அதிரடியாக நீக்கி அறிவித்தது. இந்த சட்டம் அமலுக்கு வரும்போது ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வீட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஆனால் மாறாக பாகிஸ்தானிலும், தமிழ்நாட்டிலும் ,மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு படி மேலே சென்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் கிடையாது, அது தனிநாடாக இருக்க வேண்டும், இல்லையென்றால் பாகிஸ்தானுடன் இருக்கவேண்டும் என்று பேசத்தொடங்கியது.

திமுகவின் இந்த செயல்பாடு இந்திய அளவில் பெரிய சர்ச்சையையும்,விவாதத்தையும் உருவாக்கியது. தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது, திமுக, காஷ்மீர் பிரச்சனைக்காக போராட காரணம் என்ன என்று சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் காஷ்மீர் பிரச்னைக்காக, அந்த மாநில மக்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் திமுக வாதாடியது . அப்போ கச்சத்தீவை தாரைவார்க்கும் பொது மட்டும் தமிழக மக்களிடம் கருணாநிதி கருத்து கேட்டாரா..? என்று மக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு இதுவரை திமுகவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

தற்போது ஒரு படி மேலே சென்று, காஷ்மீர் சென்று போராடப்போவதாக திமுக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் காஷ்மீரை தனிநாடாக அறிவிக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காஷ்மீரை தனிநாடாகவோ, அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கவோ போராடி வருவது பாக்கிஸ்தானும் தீவிரவாதிகளும் தான். இப்போது அந்த பட்டியலில் திமுகவும் இணைந்துவிட்டது. தமிழ்நாட்டு பிரச்சனைகளே தலைக்கு மேல் இருக்கும் போது, 10000 ஆயிரம் கிமீ தள்ளியுள்ள காஷ்மீருக்கு திமுக குரல் கொடுக்க போகிறது என்றால், காரணம் இல்லாமலா இருக்கும் என்று சமூக வட்டாரங்கள் பேச தொடங்கியுள்ளது. மேலும் திமுக பாகிஸ்தானின் குறளாகவும், காஷ்மீர் பிரிவினைவாதிகள் குறளாகவும், இந்தியாவிற்குள் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending