Connect with us

#24 Exclusive

மொத்தம் 50 ஆண்கள் அதில் மூவர் சென்னையில் சிக்கினார் திமுக EX பஞ்சாயத்து தலைவி ! இதுதான் ரியல் லிஸ்ட்

Published

on

திமுகவை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி செந்தாமரை என்பவர் அழகை காரணம் காட்டி பல ஆண்களை மயக்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பொருள், நகைகளை சுருட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் காளியன் பாளையத்தை சேர்ந்த பெண் செந்தாமரை(44) இவரது முன்னாள் கணவர் சதாசிவம். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செந்தாமரை திமுகவை சேர்ந்தவர். இவர் பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்து உள்ளார். மேலும் செந்தாமரை வழிதவறி செல்லவே சதாசிவம் செந்தாமரையை விவாகரத்து செய்து விரட்டிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்துதான் செந்தாமரையின் ஆட்டம் சென்னையில் அரங்கேறியுள்ளது, தன்னை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கர்நாடகமாநிலத்தை சேர்ந்தவர் என்றும் விதவிதமான பொய்களை கூறி 45-50 வயதினை அடைந்த தொழில் அதிபர்களை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளார், அப்படி செந்தாமரையுடன் சிக்கியவர்தான் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பாலச்சந்தர் (39)

Loading...

இவரிடம் தனது பெயரை மனுவர்ஷினி என்று கூறி அறிமுகமான செந்தாமரை இவர நடத்திவந்த பிரபல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார், 38 வயதான தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி பாலச்சந்தரை திசை திருப்பி மயக்கி அவரிடம் இருந்து, நகை, பணம் உள்ளிட்டவற்றை ஆட்டைய போட்டுள்ளார். இதுகுறித்து பாலச்சந்தர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.

Loading...

ஏற்கனவே செந்தாமரை சந்தோஷ் என்ற காவல் உதவி ஆய்வாளரையும், ராஜரத்தினம் என்ற சிங்கப்பூரில் பணிபுரியும் நபரை facebook மூலம் ஏமற்றிய அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவந்துள்ளன, இதனை அடுத்து இந்த மூவரும் மட்டுமின்றி 50 ஆண்களை இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி செந்தாமரை ஏமாற்றி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன.

திமுக பஞ்சாயத்து தலைவியாக இருந்த ஒருவரே பல ஆண்களை மயக்கி பணத்தினை பறித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது, இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தினால் செந்தாமரை பின்னணியில் உள்ள முக்கிய நபர்களை கண்டறிந்து விடலாம் எனவும், ஒருவரால் தனியாக பல நபர்களை ஏமாற்ற முடியாது இதன் பின்னால் முக்கிய புள்ளிகள் இருக்கலாம் எனவும் பலரும் குற்றம் சுமத்து கின்றனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாமல் மூடி மறைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending