Connect with us

சிறப்பு அரசியல்

திமுக முக்கிய புள்ளி சிக்கினார் வைரலாகும் வீடியோ மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள் ! மிக கேவலமான சம்பவம்

திமுக வாணியம்பாடி நகர பொறுப்பாளர் சாரதி குமார் என்பவர் மீது அவரது மனைவி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து கமிசனர் அலுவலகத்தில் புகார் ஒன்றிணை அளித்துள்ளார்.

அதில் தனது கணவன் தன்னை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் தன் குடும்பத்திடம் இருந்து 140 சவரன் நகை 20 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்திய சூழலில் மற்றொரு வயதான பெண்ணிடம் தவறான உறவில் ஈடுபட்டு வருவதாகவும் அதிரடியாக கூறியுள்ளார்.

இதனை தான் கண்டறிந்ததில் இருந்து தன்னையும், தன் குழந்தையையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்த அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முறையிட்டதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்றும் ஆனால் தனது கணவனுக்கு இந்த தகவல் தெரிந்ததை தொடர்ந்து தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

Loading...

திமுகவினர் என்றாலே கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் இன்னும் நீங்காத நிலையில் தற்போது சொந்த மனைவியின் பணத்தை பறித்து கொண்டு தன்னைவிட மூத்த பெண்ணுடன் உறவில் ஈடுபடும் இவர்களை போன்ற நபர்கள் அரசியலில் இருந்தால் நாளை பள்ளி மாணவிகளில் இருந்து வயதான பெண்கள் வரை யாரை விட்டு வைப்பார்கள் எனவும் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

Loading...

பெண்கள் சுதந்திரம் பாதுகாப்பு போன்றவை பேசப்படும் காலத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபரே இப்படி தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமில்லாமலும், சொந்த மனைவி, பிள்ளையை கொலை செய்ய வெறிகொண்டு அலைவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்திகள் எந்த முன்னணி தமிழக ஊடகங்களிலும் இதுவரை வெளிவராதது குறிப்பிடத்தக்கது, பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி விடிய விடிய விவாதம் நடத்தும் ஊடகங்கள் மனைவி ஆதாரத்துடன் புகார் அளித்தும் ஆதாரங்களை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டும் மூடி மறைப்பது ஊடகங்கள் நடுநிலையாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending