Connect with us

#24 Exclusive

திமுகவின் சதித்திட்டம் வெளியானது ஊடகத்தினர் ஈடுபட்டதும் அம்பலம் !

மூன்று நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் பாமகவினர் டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்கியதாக செய்திகள் வெளியானது, அதனை தொடர்ந்து பல அரசியல் இயக்கங்கள் கண்டித்தன, குறிப்பாக திமுக அமைப்பு செயலாளர் rs பாரதி இது ஊடகத்துறைக்கு விடப்பட்ட சவால் என்றும் ஊடகத்தினர் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று குறிப்பிட்டார் அதனை தொடர்ந்து ஜவாஹிருல்லா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் திமுக ஆதரவு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மூலமே இந்த திட்டம் தீட்டப்பட்டு தற்போது பொய் செய்தியை பரப்பியது அம்பலமாகியுள்ளது, தற்போது சம்பந்தப்பட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை மறுப்பு தெரிவித்ததுடன் பொய் செய்தி என்றும் உறுதிப்படுத்தியுள்ளது, இதுகுறித்து பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்த அருள்ரத்தினம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-

“திமுக கூலிப்படையின் மாபெரும் சதித்திட்டம்: தவறை ஒப்புக்கொண்டது டைம்ஸ் ஆப் இந்தியா!”
‘பாமகவினர் பத்திரிகையை மிரட்டினார்கள்’ என்கிற பொய்யான கோயபல்ஸ் செய்தியை உருவாக்கி, பிரசாந்த் கிஷோர் பாண்டே வியூகத்தின் படி, பலமுனை தாக்குதல் நடத்திய திமுக கூலிப்படையின் சதி தகர்க்கப்பட்டுள்ளது. இன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் ‘மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்து தாங்கள் வெளியிட்ட செய்தி தவறானது தான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட கட்டுக்கதைகளை அந்த செய்தி நிறுவனம் ஏற்கவில்லை! இதன் மூலம் திமுக 200 ரூபாய் உபிஸ், 15 கோடி ரூபாய் பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, சாதிவெறி போலி பத்திரிகையாளர்களின் முகத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை கரி பூசியுள்ளது.

Loading...

“பின்னணி என்ன?”
பிஹாரி பிராமணர் பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் Indian Political Action Committee (I-PAC) அமைப்பு, மு.க. ஸ்டாலினுடைய அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் ஆலோசனை அமைப்பாக பல கோடி ஊதியத்தில் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் “சமூக வலைதளங்களில் பதிலடி கொடுப்பதற்கு, எங்களுக்கு I-PAC நிறுவனம் தேவைப்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி, கட்சி பணிகளையும் மாற்றிக் கொள்கிறோம். பிரசாந்த் கிஷோர், எங்களுக்கு வேலைக்காரர்; அவருக்கு நாங்கள் பணம் தருகிறோம்” என்று கூறினார்.

Loading...

I-PAC நிறுவனம் பீஹார் தேர்தல், பஞ்சாப் தேர்தல், மணிப்பூர் தேர்தல், ஆந்திர தேர்தல் என பல இடங்களில் பணியாற்றிய போது, தான் பணியாற்றும் கட்சிக்கு எதிராக உள்ள தலைவர்கள் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவதை ஒரு முக்கியமான யுக்தியாக கையாண்டுள்ளது.அதே போன்று, தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக உள்ள தலைவர்கள் குறித்து கட்டுக்கதைகளை பரப்புவதை ஒரு முக்கிய செயல்திட்டமாக முன்னெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர். அதன் முதல் கட்டத்தை கீழ்க்கண்டவாறு அரங்கேற்றினர்:

  1. முதலில், டைம்ஸ் ஆப் இந்தியாவில் கோலோச்சும் மலையாள லாபியை விலைக்கு வாங்கி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்த பொய் செய்தியை வெளியிட செய்தனர்.
  2. சமூக ஊடகங்களில் 200 ரூபாய்க்கு கூலிக்கு மாரடிக்கும் உபிஸ் கும்பல் மூலமாக இதனை பெரிதாக பகிர்ந்தனர்.
  3. இந்த பொய்செய்திக்கு பாமகவினர் நேரில் சென்று மறுப்பு தெரிவித்ததை, ‘பாமகவினர் பத்திரிகையை மிரட்டினார்கள்’ என்கிற மேலும் ஒரு பொய் பரபரப்பு செய்தியாக உருவாக்கினர்.
  4. ஜவாஹிருல்லா, 15 கோடி ரூபாய் பாலகிருஷ்ணன் (CPM), சாதிவெறி போலி பத்திரிகையாளர்கள் என பல தரப்பிலும் கண்டன அறிக்கைகளை வெளியிட செய்தனர். ஒரு போலி பத்திரிகையாளர் கும்பல் கோவையில் ஆர்ப்பாட்டமும் நடத்தியது!இந்த சூழலில் தான் – ‘மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்து தாங்கள் வெளியிட்ட செய்தி தவறானது தான்’ – என டைம்ஸ் ஆப் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.”மாபெரும் கோயபல்ஸ் சதித்திட்டம்”மேற்கண்ட நிகழ்வுகள் சாதாரணமானவை அல்ல. பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் ‘கோயபல்ஸ் பிரச்சாரத்திட்டம்’ மிக மிக ஆபத்தானது. தமிழ்நாட்டின் ஜனநாயக அமைப்பையே நிர்மூலமாக்கும் மாபெரும் சதித்திட்டம் இதற்கு பின்னால் உள்ளது.

இவர்கள் தெரிந்தே பொய் செய்தியை கட்டமைக்கிறார்கள். சில ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்கி, அதனை பத்திரிகையில் வெளியிட செய்கிறார்கள். அந்த போலி செய்தி வந்த உடன் பல கோடிகள் செலவிட்டு சமூக ஊடகங்கள் மூலமும் பரப்புகின்றனர்; 15 கோடி ரூபாய் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் மூலம் அறிக்கைகள் வெளியிட செய்கிறார்கள். திமுகவினர் பினாமியாக உருவாக்கி வைத்திருக்கும் ‘துக்கடா’ அமைப்புகள் மூலமாக சிறிய ஆர்ப்பாட்டங்களை நடத்த வைத்து, அதனை பெரிதாக ஊடகங்களில் வெளியிட செய்கிறார்கள்.

இவ்வாறாக, ஒரு Fake News செய்தியை பல முனைகளிலும் புயல் வேகத்தில் பரப்புகின்றனர். இதற்காக பல கோடி ரூபாய் பணத்தை வீசி எறிகின்றனர்.
இந்த திட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் – இந்த போலி செய்தி மட்டும் தான் பெரும்பாலான மக்களிடம் சென்று சேரும். ஓரிரு நாட்களுக்கு பின்னர் வெளியாகும் உண்மை செய்தி யாரிடமும் போகாது. ஏனெனில், உண்மையை யாரும் பல கோடி செலவிட்டு விளம்பரம் செய்ய மாட்டார்கள்.

எடுத்துக்காட்டாக – டைம்ஸ் ஆப் இந்தியா போலி செய்தியையும், திமுக கூலிப்படையின் அறிக்கைகளையும் – பிரசாந்த் கிஷோர் பாண்டே கும்பல் பல கோடி பணம் செலவிட்டு விளம்பரம் செய்துவிட்டது. ஆனால், இன்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள உண்மை விளக்கம் பொதுவான மக்களுக்கு சென்று சேரவில்லை. இந்த உண்மையை பலகோடி செலவிட்டு யாரும் விளம்பரம் செய்ய முடியாது!

“இனி வரப்போகும் ஆபத்துகள்”
இதே போன்று இனி இவர்கள் ஒன்றன் மீது ஒன்றாக போலி செய்திகளை திட்டமிட்டு பரப்பிக்கொண்டே இருப்பார்கள். மு.க. ஸ்டாலினுடைய திறமைகளை பெரிதாக்கி காட்ட வாய்ப்பே இல்லை என்பதால், பாமக, அதிமுக போன்ற ஸ்டாலினுக்கு எதிரான கட்சிகள் மீது கோழைத்தனமான கோயபல்ஸ் தாக்குதலை தொடுப்பார்கள். பெரும் பணத்தை செலவிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நவீன கோயபல்ஸ் கும்பலை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது. இது ஒரு கட்சிக்கு எதிரான தாக்குதல் இல்லை. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித்திட்டம் ஆகும். இதன் எதிர்கால விளைவு, தமிழகத்தை பேரழிவில் தள்ளும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

Trending