Connect with us

#24 Exclusive

இனி திமுக + MP கள் எண்ணிக்கை 40 புது எம் பியை கட்சிக்குள் சேர்த்த ஸ்டாலின் பொங்கல் விழாவில் அறிவித்தார்,

Published

on

திமுக கூட்டணிக்கு தமிழகம் புதுசேரி சேர்த்து 39 எம்.பிக்கள் உள்ளனர் தேனி தொகுதியில் அதிமுக எம் பி ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற எப்படி 40 இருக்கும் என்று யோசனை செய்கிறீர்களா? ஸ்டாலின் புதிதாக ஒரு தொகுதியை சேர்ந்து விட்டார்.

அந்தமான் நிகோபார் தீவிற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு அவரது தந்தையும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி சிலையை திறந்து வைத்தார், அப்போது பல திரைப்பட வசனங்கள், அந்தமானுக்கு தமிழுக்கும் உள்ள சொந்தம், சுபா சந்திர போஸ், மற்றும் விஷம் குடிக்க கூறிய பல வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

Loading...

அந்தமான் சென்ற ஸ்டாலின் அண்ணா சிலைக்கு அருகில், கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, தமிழ்நாடா இல்லை அந்தமானா என்று தெரியாத அளவிற்கு மிகுந்த அளவில் தொண்டர்கள் குவிந்து வரவேற்பு கொடுத்ததாக பெருமையடைந்தார், அத்துடன் திமுக இயக்கம் அந்தமானில் துடிப்புடன் செயல்படுவதாகவும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திமுக தலைவராக கருணாநிதி அவர்களிடம் ஒருவர் ஒரு பக்கம் விஷம் மற்றொரு பக்கம் திமுகவை விட்டு செல்லவேண்டும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு சட்டென விஷத்தை குடிப்பேன் என்று கூறியதாகவும்

Loading...

அதுபோல் அனைவருக்கும் உணர்வு இருக்கவேண்டும் என்று பேசினார்.
மேலும் நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் என்னவாகியிருப்பேன் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதாகவும் நிச்சயம் அரசியல்வாதியாகத்தான் இருப்பேன் வேறு எங்கும் செல்லமாட்டேன் என்று பேசியிருந்தார், இந்நிலையில்தான் திடீர் என அந்தமான் திமுகவினர் ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர் அதன்படி தமிழ்நாடு புதுசேரியை சேர்த்து 40 தொகுதிகள் என இருப்பது போன்று இனி அந்தமானையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இனி திமுக அந்தமானையும் சேர்ந்து அதன் அதிகாரத்தில் கொண்டு வந்ததாகவும் இனி எங்கு சென்றாலும் திமுக கூட்டணிக்கு 40 எம் பி கள் இருப்பதாக குறிப்பிடப்படும் என்று தெரிவித்துள்ளார், அதையே கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் தெரிவித்தார்.

தற்போது ஸ்டாலினின் அறிவிப்பை பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர், இது அந்தமானில் உள்ள அந்த எம் பி க்கு தெரியுமா என்றும் ஒரு சிலர் பாகிஸ்தானிலும் கிளையை தொடங்குங்கள் சரியாக இருக்கும் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

அதுசரி ஏன் இந்த திடீர் அந்தமான் பாசம்?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending