இந்த 4 இன்ச் உளவு விமானம் செய்த பதிவு, திமுகவிற்கு வில்லனாக மாறப்போகும் தாம்பரம் சம்பவம் !!!

நாடு முழுவதும் CAA சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போர் கொடி தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர், பல இடங்களில் கலவரங்கள் வெடித்து உயிர் பலிகளும் நிகழந்தன, ரயில்கள் கொளுத்தபட்டன, இப்போராட்டம் மிக பெரிய அளவில் நடைபெற காரணமாக அமைந்தது, பாஜகவை எதிர்த்து அரசியலில் ஈடுபடும் கட்சிகள் CAA எனும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது.

Loading...

இது மத்திய அரசிற்கு பெருத்த தலைவலியை உண்டாக்கும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மத்திய உளவுத்துறை அமைத்த state 21 எனும் குழு தற்போது மிக பெரிய பணியை செய்து முடித்திருக்கிறது, அதன் விபரம் தற்போது வெளியான நிலையில்தான் மம்தா பானர்ஜி தொடங்கி ஸ்டாலின் வரை அனைவரும் அமைதியாக இருக்க காரணம்.

STATE 21 என்பது மாநிலத்திற்கு 21 நபர்கள் 5 குழுக்கள் எனவும் ஒருவர் தலைமை தாங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் பணி என்பது ஒன்று மட்டும்தான் அதில் மிக முக்கியமானது, ஒவ்வொரு CAA எதிர்ப்பு போராட்டத்திலும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை தெளிவாக ரெகார்ட் செய்வது.

Loading...

நீங்கள் நினைப்பது போல மேடை பேச்சுக்களை அல்ல அங்கு தலைவர்கள் இடையே நடைபெறும் முக்கிய பேச்சுக்களை துல்லியமாக படம் பிடிப்பது அங்கு சந்தேகப்படும் நபர்களின் முகத்தினை தெளிவாக ரெகார்ட் செய்வது இதைத்தான் இந்த குழு கவனித்து வந்துள்ளது.

இந்த குழு அதற்க்கு பயன்படுத்திய சாதனம்தான் “ப்ளாக் ஹார்னெட்” நார்வே நாட்டை சேர்ந்த ‘ராக்ஸ்’ டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மிகச்சிறிய அளவிலான கையடக்க உளவு விமானமாகும். இதன் மொத்த எடை 16-17 கிராம் அளவுதான் , இதன் நீலம் 4 இன்ச் இந்த சாதனம் தெளிவாக அனைத்தையும் 15 அடி தூரத்தில் இருந்தே பதிவு செய்துவிடும்.

அப்படி சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்பு பேரணி உளவுத்துறையை சேர்ந்த S-21 குழு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகளில் உள்ள முகத்தினை சோதனை செய்து பார்த்ததில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இரு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பிரிவினர் இடையே தாம்பரம் அருகே நிவாரண பொருள்களை பிரித்து வழங்குவதில் தகராறு ஏற்பட விவகாரம் காவல்துறைக்கு சென்றது, பின்பு அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தமிழ் தெரியாத வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

உடனடியான அவர்கள் அடையாள அட்டைகள் கைப்பற்ற பட்டன, சுமார் 100 நபர்களிடம் சோதனை செய்ததில் அனைவரிடம் இந்தியருக்கு சொந்தமான ஆதார் கார்டு இருப்பது தெரியவந்துள்ளது, இங்குதான் மத்திய குற்ற பிரிவு போலீஸாருக்கும்,, குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் சென்றுள்ளது, குடியுரிமை அதிகாரி இந்த விபரங்களை சோதனை செய்ய உள்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளார்.

அங்குதான் மிக பெரிய சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் புகுந்தவர்கள், ஸ்டாலின் தலைமையில் CAA போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது முக அடையாளங்களை பொருத்தி பார்ப்பதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் அந்த சட்டவிரோத குடியேறிகளில் ஒருவருக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது, ஒரு உளவு விமானத்தில் பதிவான சிறு காட்சிகள் மூலம் யார் என்ன என அலசி ஆராய்ந்த உளவுத்துறை அடுத்து என்ன செய்ய போகிறது என்பது அவர்களுக்கே தெரிந்த ரகசியம்.

ஆனால் மிக பெரிய அளவில் ஏதோ ஒன்று தமிழக அரசியல் களத்தை புரட்டி போட போகிறது என்பது மட்டும் நிச்சயம், திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் கட்சியில் உள்ள மாற்று மதத்தினர் மீதோ அவர்கள் நம்பிக்கை மீதோ பெரிதாக நன்மதிப்பு இல்லாதவர் என்று கூறப்படும் நிலையில் இப்போது ரோஹிங்கியா குழுவினர் தாம்பரத்தில் பிடிபட்டது என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறதோ?

பிளாக் ஹண்டர் வேறு எதையெல்லாம் பதிவு செய்து உள்ளதோ??

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*