திமுகவையும் பெரியாரிஸ்ட்களையும் பகைத்தால் இதுதான் நிலைமை சொன்னதை செய்து காட்டிய கும்பல் இப்போ சந்தோசமா?

Loading...

சென்னை.,

இந்த செய்தியை படித்த பிறகு நீங்கள் வீட்டில் இருந்தால் காவேரி தொலைக்காட்சி சேனல்.சென்று பாருங்கள் அல்லது youtube சென்று cauvery news live என்று search செய்து பாருங்கள் அப்போதுதான் இதன் உண்மை தன்மை புரியும்.

Loading...

சமீபத்தில் காவேரி செய்தி தொலைக்காட்சியில் தடம் என்ற நிகழ்ச்சியில் பெரியாரிஸ்ட் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு நெறியாளர் மதன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பல இடங்களில் நெறியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சுப. வீரபாண்டியன் திணறினார் குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்கிறார், பெரியார் சொன்னதுபோல் கோவிலுக்கு செல்பவர்கள் காட்டு மிராண்டிகள் என்றால் துர்கா காட்டு மிராண்டியா என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதற்கு சுப. வீரபாண்டியனிடம் பதில் இல்லை அந்த நிகழ்ச்சியில் மதன் கேட்ட கேள்விகள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் பெரிதும் எதிரொலித்தது, சாதாரண மக்கள் கூட ஆமாம் ஏன் பெரியாரிஸ்ட்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினர்.

இது ஒரு புறம் இருக்க நெறியாளர் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மீது பெரியாரிஸ்ட்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் காவேரி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியராக பணியாற்றிய ஜென்ராம் சுபவீரபாண்டியனிடம் மன்னிப்பு கேட்க சொல்லி நெறியாளரை வற்புறுத்த அவர் மறுத்து விட்டார்.

அதனை தொடர்ந்து ஜென்ராம் காவேரி தொலைக்காட்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமான மற்றும் பெரியார், கம்யூனிசம் கொள்கை கொண்டவர்களை வைத்து நிர்வாகத்திற்கு தினமும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கருப்பு சட்டை அணிந்து வருவது, ஒழுங்காக வேலை செய்யாமல் இருப்பது, நெறியாளர் மதனை தனிமை படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டனர், அதன் தொடர்ச்சியாக முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலையீட்டின் பேரில் பலரும் தொலைக்காட்சியில் இருந்து விலகியதாகவும் இன்று காவேரி தொலைக்காட்சியே செயல்படாத நிலைமைக்கு சென்றுவிட்டதாகவும் குற்றசாட்டு கூறப்படுகிறது .

இதனால் தற்போது செய்திகள் ஏதும் வெளியிடாமல் காவேரி தொலைக்காட்சி முடங்கியுள்ளது மண் வாசனை என்ற நிகழ்ச்சியை தொடர்ச்சியாக ஒரு வாரமாக ஒளிபரப்பு செய்து வருகின்றனர். ஒரு நெறியாளர் முறையான கேள்விகளை கேட்டதற்காக ஊடகத்தையே முடக்கிவிட்டனர். s.v. சேகர் பேசியதற்கு கோவப்பட்ட எந்த பத்திரிகையாளரும் இந்த செயலை கண்டிக்கவில்லை.

சுப வீரபாண்டியன் பேட்டிக்கு பிறகு திமுகவையும், பெரியாரிஸ்ட்களையும் பகைத்துக்கொண்டு தமிழகத்தில் நிர்வாகம் நடத்தமுடியாது என்று சவால் விட்டவர்கள் தற்போது அதனை சாதித்துவிட்டதாக கொண்டாடி வருகின்றனராம்.

விரைவில் காவேரி டிவி புத்துணர்வுடன் யாருக்கும் அஞ்சாமல் வரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

Loading...
About Tnnews24 2634 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*