Connect with us

#24 Exclusive

திமுகவை எதிர்த்து குரல் கொடுத்த எட்டியப்பசோழனுக்கு ஏற்பட்ட ஆபத்து ! எங்கே செல்கிறது தமிழ்நாடு?

சமூகவலைத்தளம் :- சமூகவலைத்தளமான முகநூல் மூலம் பல்வேறு சமுதாய பிரச்சனைகள், அன்றாட நடப்புகள் குறித்து சாமானிய மக்களுக்கும் புரியும்படி வீடியோ வெளியிட்டு வருபவர் எட்டியப்ப சோழன் என்பவர், இவரது முகநூல் வீடியோக்கள் பலவும் பெரும்பான்மையான தமிழக மக்களை சென்றடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று உள்ளாட்சி தேர்தலை திமுக ஏன் சந்திக்க பயம்கொள்கிறது என்ற தலைப்பில் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார், அதில் தற்போது உள்ளாட்சிகளில் ஓட்டு கேட்டு திமுக சென்றால் ஒவ்வொரு கிராம பெண்களும் கடுப்பில் இருக்கிறார்கள், மாதம் 6 ஆயிரம் பணம் எங்கே.? 5 பவுன் நகை கடன் தள்ளுபடி எங்கே என கேட்ப்பார்கள் இத்தனை திமுக எப்படி சமாளிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தார்.

அத்துடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா இந்து மதத்திற்கு ஏன் வாழ்த்துக்கள் சொல்வதில்லை என்ற கேள்விக்கும் முறையாக பதிலடி கொடுத்திருந்தார், இந்நிலையில் இவரின் தொடர் நடவடிக்கைகளால் பலரும் விழிப்புணர்வு அடைந்துவருவதாக எண்ணிய திமுகவினர் எட்டியப்ப சோழன் அவர்களை நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

Loading...

அதனால் தற்போது அவரது குடும்பத்தினரின் பயத்தினால் இனி முகநூல் பதிவு இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரை மனரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது இந்த பதிவை அவர் முகநூலில் பதிவு செய்துள்ளார், எப்போதும் இந்து மதத்திற்கு எதிராக பேசுபவர்களை நாகரிகமான முறையிலேயே பதிலடி கொடுத்து வந்துள்ளார் எட்டியப்பன் ஆனால் இப்போது..,

Loading...

இந்நிலையில் அவருக்கே ஒரு பாதிப்பு என்ற போது இந்து அமைப்புகள், பாஜகவினர் மற்றும் மற்ற அமைப்புகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்களா? அவரது பாதுகாப்பிற்கு வழிவகுப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த கட்சியும் சித்தாந்தமும் அடிமட்ட தொண்டன் காக்க படுவதிலேயே வளரும் எட்டியப்ப சோழனுக்காக குரல் கொடுப்பார்களா தமிழர்கள்? அனைவருக்கும் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கும்போது ஒருவரை மிரட்டுவது கருத்து சுதந்திரத்தை சிதைக்கும் பாசிசம் ஆகாதா?

©TNNEWS24

Loading...

Trending