கிரேன் என் மீது விழுந்திருக்கலாம் – இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் சோகம் !

கிரேன் என் மீது விழுந்திருக்கலாம் – இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் சோகம் !

கிரேன் என் மீது விழுந்திருக்கலாம் – இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் சோகம் !

இந்தியன்  2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் முதன் முதலாக தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் நடந்த விபத்தில் இந்தியன் 2 படக்குழுவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Loading...

விபத்து குறித்து கமல் மற்றும் லைகா ஆகியோர் இழப்பீடு மற்றும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் இப்போது முதன் முறையாக இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மிகுந்த வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். மோசமான விபத்து நடந்த நாளிலிருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்து தூக்கம் வருவதில்லை. நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading...

விபத்து குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்குக் காரணம் என சொல்லப்பட்ட கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.

Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *