Connect with us

சினிமா

மனிதன்தான் மருந்து கண்டுபிடித்தான் – நட்டிக்குப் பதில் அளித்த இயக்குனர் ராம்குமார் !

மனிதன்தான் மருந்து கண்டுபிடித்தான் – நட்டிக்குப் பதில் அளித்த இயக்குனர் ராம்குமார் !

கொரோனா வைரஸ் குறித்து கருத்து பதிவிட்ட ஒளிப்பதிவாளர் நட்டி தெரிவித்த கருத்துக்கு முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 2,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள பெருவாரியான மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளனர். இன்று மாலை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த ஊரடங்கின் மூலம் ஏழை மற்றும் தினக்கூலி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Loading...

கொரோனா பிரச்சனை ஒருபக்கம் இருக்கும் நிலையில் இது சம்மந்தமாக பகுத்தாறிவாளர்களுக்கும் கடவுள் பக்தி உள்ளவர்களுக்கும் இடையில் உரசல் எழுந்துள்ளது. அது திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நட்ராஜ் ‘கடவுள நூறு வருஷமா திட்டினோம்… இன்னைக்கு கடவுள் கதவை மூடிட்டாரு…. என்ன பண்ணுவோம் மனிதர்களே’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நட்டியின் இந்த கருத்துக்கு முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் ‘ன்பும் அறிவியலும் மட்டும்தான் வெற்றி பெறும்! 100 வருடங்களுக்கு முன்னாடியே வந்த பல கொள்ளை நோய்கள் அனைத்துக்கும் அறிவியல்தான் மருந்து கொடுத்துருக்கு. கடவுள் அல்ல!’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...

Trending