சினிமாவைக் காப்பாற்ற ஹீரோக்கள் இதை செய்ய வேண்டும் – மணிரத்னம் வேண்டுகோள்!

சினிமாவைக் காப்பாற்ற ஹீரோக்கள் இதை செய்ய வேண்டும் – மணிரத்னம் வேண்டுகோள்!

Loading...

கொரோனாவுக்கு பின் சினிமா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பெரிய ஹீரோக்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் தனது கனவுப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் தொடங்கி நடத்தி முடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,  ஜெயம் ரவி மற்றும் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா, சரத்குமார் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படம் தற்போது கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சமீபத்தில் நடந்த ஒரு வெபினோர் கலந்துரையாடலில் சினிமாவின் எதிர்காலம், சினிமா தயாரிப்பு முறைகளில் மாற்றம் ஆகியவைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

Loading...

அதில் ‘கொரோனா தாக்கத்தால் இனி குறைந்த பட்ஜெட்டில் அதிக படங்கள் உருவாகும். இப்போதைக்கு தியேட்டர்களில் படங்களை வெளியிடுவது சாத்தியம் இல்லை என்பதால் படங்களின் பட்ஜெட் குறைக்கப்படவேண்டும். அதற்காக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால், திரையுலகம் இக்கட்டான சூழலில் இருந்து வெளிவரும்.

எந்த ஒரு திரைப்படமுமே திரையரங்கில் பார்க்கும் போது தரும் அனுபவத்துக்கு ஈடு இல்லை. ஆனால் இப்போது தியேட்டர்களுக்கு கூட்டம் வருவது குறைந்துள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள். எனவே ஓடிடி ப்ளாட்பார்ம்களின் வருகையை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*