#Exclusive அசாம் NRCக்கும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள NRCக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா ? ஆச்சரிய தகவல்கள் !

#Exclusive  அசாம் NRCக்கும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள NRCக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா ? ஆச்சரிய தகவல்கள் !

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் CAB/CAA மற்றும் NRC க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அசாமில் அமல்படுத்தப்பட்ட NRCயை போலவே இந்தியா முழுவதும் NRC அமல்படுத்தப்பட்டு இந்தியாவிலுள்ள முஸ்லீம்களை வெளியேற்ற போகின்றனர் என்று வதந்தி பரவி வருகிறது. எனவே NRC சார்ந்த சந்தேகத்தை இந்த கேள்வி பதில் மூலம் நீக்க முயற்சிப்போம்.

அசாம்மில் அமல்படுத்தப்பட்ட NRCக்கும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள NRCக்கும் என்ன வித்தியாசம் ? பதில்: 1971ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வென்று கிழக்கு பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஷ் என்று தனி நாட்டை உருவாக்கியது. இந்த போரின் போதும் போருக்கு பின்பும் பங்களாதேஷை சேர்ந்த மக்கள் பலர் அருகில் இருந்த அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஊடுருவினர். இது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தங்கள் கலாச்சாரம், மொழி பாதிக்கப்படும் என்று மலைவாழ் மக்கள் போராடினர். இதனால் 1985ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி NRC எனும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்த முன்மொழிந்தார். அதற்காக 1985ல் மாணவர் அமைப்புகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பெயர் தான் அசாம் அகார்ட் 1971. அதனால் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் அசாம்மில் தேசிய மக்கள் பதிவேடு நடத்தி 5 மாதங்கள் முன்பு தான் பதிவேடு வெளியானது. இது 1971 போர்ருக்கு பிறகு பங்களாதேஷில் இருந்து அனுமதியில்லாமல் ஊடுருவியவர்களை வெளியேற்ற நடைப்பெற்றதாகும். ஆகவே தான் அசாம்மில் எடுக்கப்பட்ட தேசிய மக்கள் பதிவேடு NRC க்கு மக்கள் 1971க்கு முன்னர் தாங்கள் இந்தியாவில் தான் வசித்தோம் என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று இருந்தது.

ஏனென்றால் இது அசாம் அகார்ட் 1971 மையமாக கொண்டு நடத்தப்பட்டது. இதற்கும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள NRCக்கும் பல்வேறு வேருபாடுகள் உள்ளது. இன்னும் இதற்கான வரைவு கூட தயாரிக்கப்படவில்லை. உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அசாம் NRC யில் கேட்கப்பட்ட ஆவணங்கள் அதாவது 1971 க்கு முன்னர் தாங்கள் இந்தியாவில் தான் வசித்தோம் என்பதற்கான ஆதாரம் மற்றும் முன்னோர்கள் இங்கு தான் வசிதார்கள் என்பதற்கான ஆதாரங்கள் தோவையில்லை. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள NRCயில் பிறந்த தேதி, இடம், பெற்றோர் பெயர் இருந்தால் போதும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இருந்தாலே போதும். இது எதுவும் இல்லை என்றால் லைசன்ஸ், இன்ஷுரன்ஸ், ஆதார், பாஸ்ப்போர்ட், பள்ளி மாற்று சான்றிதழ், வீட்டு பத்திரம் போன்ற ஏதாவது ஒன்று இருந்தாலே போதும் என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் NRC வரைவு தயாரிக்கப்படும் போது முன் அனைத்து தரப்பு மக்களிடமும் ஆலோசனை கேட்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Loading...

அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட NRCயை குறைசொல்லுவோர் அதை முன்மொழிந்தது ராஜீவ் காந்தி தான் என்றும் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் தான் நடந்தது என்பதையும் ஏன் கூற மறுக்கின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Loading...

இறுதியாக இந்த சட்டத்தினை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் சட்டத்தினை முழுவதுமாக படித்து பார்க்காமல் நடப்பவை. இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை வெளியேற்ற முடியாது. அப்படி நடந்தால் உச்ச நீதிமன்றம் அமைதியாகவா இருக்கும் ? இந்த விஷ பிரச்சாரம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்க நிலையற்ற தன்மையை உருவாக்க பிரிவினைவாதிகள் மற்றும் சமூக விரோதிகளால் நடத்தப்படுபவை. எனவே மக்கள் அனைவரும் இந்தியனாக இணைந்து இந்த புரளிகளை முறியடித்து அரசு மற்றும் காவல்துறைக்கு உதவியாக இருப்போம்.

Loading...

Tnnews24 Arun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *