இதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா? அதிர்ச்சி தகவல்?

இதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா? அதிர்ச்சி தகவல்?

Loading...

மதுரை :- பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் இரண்டு மணி நேரத்தில் வைரல் ஆகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் திமுகதான் என்றே சொல்லவேண்டும், திமுக தலைவர் பாஜகவின் ட்விட்டர் பதிவிற்கு பதில் கொடுக்க சில மணி நேரங்களில் தமிழகத்தை சேர்ந்த இடதுசாரிய சிந்தனை கொண்ட ஊடகங்கள் அதனை ஊதி பெரிதாக்கினர்.

இதற்கு முன்னர் ஸ்டாலினை தீபாவளி ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகையின் போது தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்த போது அமைதியாக இருந்த ஸ்டாலின் திடீரென திருவள்ளுவர் விவகாரத்தில் எதிர்க்கருத்து சொல்லியத்துடன், உடனடியாக அதை தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் விவாதத்திற்கு எடுத்து விவாதம் செய்தது சந்தேகத்தை கிளப்பும் விதமாகவும், எதையோ மூடி மறைக்க பாக்கிறார்கள் என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அதிர்ச்சியான சம்பவம் வெளிவந்துள்ளது.

Loading...

மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் திருமணமான பெண்ணை கட்சியில் பதவி தருவதாக கூறி அவருடன் நெருக்கமாக பழகி பணம் உள்ளிட்டவைகளை பெற்று கொண்டு அவரை மிரட்டி வந்துள்ளார் என்றும் , மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிட்டார்?

கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவம் போன்றே இந்த சம்பவமும் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோல் பல பெண்களை இவர்கள் ஆசை வார்த்தை கூறி மோசம் செய்திருக்கலாம் என்றும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டால் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என்று நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக பொதுவெளியில் குற்றம் சுமத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் பரவினால் எங்கு பொள்ளாச்சி சம்பவம் போன்று வருகிற உள்ளாட்சி தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அச்சம் கொண்ட காரணத்தால் வேண்டுமென்றே திருவள்ளுவர் உடையை வைத்து விவகாரத்தை திசை திரும்புவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும் இதற்கு சில ஊடகங்களும் துணை போவதாகவும், பொள்ளாச்சி விவகாரத்தை பெரிது படுத்திய எந்த ஊடகமும் அதே போல் குற்றத்தில் ஈடுபட்ட நிர்வாகியை வெளிக்காட்டவில்லை ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். பொள்ளாச்சி சம்பவத்தில் வேகமாக வந்து புலன் விசாரணை நடத்திய கோபால் போன்றவர்கள் ஏன் இதுகுறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்றும் எதிர் கேள்விகள் எழுகின்றன.

ஓ அதுதான் எதிர்க்கட்சிகள் தொடங்கி ஊடகங்கள் வரை திருவள்ளுவர் உடை விவகாரத்தையே பேசுகிறார்களோ?

Loading...
About Tnnews24 2659 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*