Connect with us

#24 Exclusive

ஒருநாள் போட்டிகளில் இருந்து கழற்றிவிடப்பட்ட தோனி பிசிசிஐ வெளியிட்ட பட்டியல் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாட்கள் நீடித்தவர் கேப்டன் கூல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் மஹேந்திர சிங் தோனி இவரது தலைமையில் தான் இந்திய அணி புதிய உத்வேகத்தை அடைந்தது , அதுவரை இரண்டாம் தர அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி , உலகின் சிறந்த அணி என்ற இடத்திற்கு உயர்ந்ததில் தோனியின் பங்கு முக்கியமானது .

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் எளிய இலக்கை அடிக்க முடியாமல் தோற்றது அதற்கு தோனி முக்கிய கட்டத்தில் ரன் அவுட் ஆனதும் ஒரு காரணமாக கூறப்பட்டது , அந்த போட்டிக்கு பிறகு இதுவரை தோனி இந்திய அணிக்காக ஒரு போட்டி கூட விளையாடவில்லை

ஆரம்பத்தில் தோனி தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஓய்வில் இருப்பதாக சொன்னாலும் , பின்னாளில் தோனி ஓரங்கட்ட படுவது தெளிவாக தெரிகிறது , ஆனால் தோனி போன்ற ஒருவர் முறையாக போட்டிகள் வழங்கப்பட்டு ஓய்வு பெறவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் . இது ஒருபுறம் இருக்க இன்று பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது

Loading...

அதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை , இந்த ஒப்பந்த பட்டியல் என்பது இந்திய வீரர்கள் பிசிசிஐ யுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் அதன்படி வீரர்கள் A , b , c என்று பிரிக்கப்பட்டு அவர்கள் இருக்கும் பிரிவுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் , இன்று வெளியான பட்டியலில் கேப்டன் கோலி , ரோஹித் சர்மா , பும்ரா ஆகியோர் ஏ + பிரிவில் இடம்பெற்றுள்ளனர் ,

Loading...

இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை ஏற்கனவே ரவி சாஸ்திரி தோனி ஓய்வு பெறுவார் என்று சூசகமாக கூறிவந்த நிலையில் இப்போது தோனியின் பெயர் பட்டியலில் இல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . இந்த பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் சில போட்டிகளில் மட்டும் ஆடலாம் என்றும் அதற்கான சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கூறியுள்ளனர்

ஆனால் தோனியின் ஒருநாள் போட்டுக்கலாம் முடித்துவிட்டதாகவும் இனி அவர் இருபது ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கூறி வருகின்றனர்

Loading...

Trending